புகார் மனுக்களை ஆன்லைனில் பதிவு செய்யும் முறை துவக்கம்
புகார் மனுக்களை ஆன்லைனில் பதிவு செய்யும் முறை துவக்கம்
புகார் மனுக்களை ஆன்லைனில் பதிவு செய்யும் முறை துவக்கம்
ADDED : ஆக 01, 2011 11:24 PM
தேனி: கலெக்டர் அலுவலகத்திற்கு அனுப்பப்படும் புகார் மனுக்களை, ஆன்லைனில் பதிவு செய்யும் புதிய முறை, தேனி உட்பட 28 மாவட்டங்களில் நேற்று துவங்கியது.
கலெக்டர் அலுவலகங்களில் புகார் அளிக்க கால்கடுக்க காத்துக்கிடக்கும் நிலை இனி இல்லை.
ஆன்லைனில் புகார் மனுக்களை பெறும் திட்டம் நேற்று முதல் துவக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஆன்லைனில் தங்கள் புகார்களை மாவட்ட கலெக்டர் அலுவலக வெப்சைட் முகவரியில் அனுப்பினால் போதும். சென்னையில் இருந்து புதிய சர்வர் சாப்ட்வேர் மூலம் இந்த ஆன்லைன் பதிவுகள் பெறப்படுகின்றன. மாவட்ட அலுவலர்கள் எடுத்த நடவடிக்கை விபரமும் மனுதாரருக்கு தெரிவிக்கப்படும். மனுக்கள் பெறப்பட்டு குறிப்பிட்ட காலத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதை மாவட்ட மக்கள் குறைதீர்ப்பு அலுவலர், துறைவாரியாக ஆய்வு செய்வார். நடவடிக்கை எடுக்காத அல்லது விசாரணை நடத்தப்படாத மனுக்களை, மீண்டும் அதே துறைக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க ஆலோசனை தருவார். நடவடிக்கை எடுக்க முடியாத மனுக்கள் குறித்தும் பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும். விண்ணப்பதாரர் எல்லா நாட்களிலும் புகார் தரலாம். ஆன்லைனில் அனுப்பும் விண்ணப்பங்களுக்கு அந்தந்த மையங்களில் ரசீது தரப்படும்.