ADDED : செப் 02, 2011 11:22 PM
உடுமலை : உடுமலை வித்யாசாகர் கலை அறிவியல் கல்லூரியில், தகவல் தொழில்நுட்பத்துறை மன்ற துவக்க விழா நடந்தது.
கல்லூரி செயலர் சத்யநாதன் முன்னிலை வகித்தார். முதல்வர் சிந்தாமணி தலைமை வகித்தார். ஆலோசகர் சுப்பிரமணியன் பேசினார். உடுமலை அரசு கலைக் கல்லூரி கணிப்பொறியியல் துறை தலைவர் கிரிஸ்டோபர் ஐ.டி., துறையின் இதழை வெளியிட்டார். துறைத் தலைவர் ரேணுகாதேவி, மாணவ, மாணவிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.