/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/சூலூரில் புதிய தாலுகா அலுவலகம் :கலெக்டர் தகவல்சூலூரில் புதிய தாலுகா அலுவலகம் :கலெக்டர் தகவல்
சூலூரில் புதிய தாலுகா அலுவலகம் :கலெக்டர் தகவல்
சூலூரில் புதிய தாலுகா அலுவலகம் :கலெக்டர் தகவல்
சூலூரில் புதிய தாலுகா அலுவலகம் :கலெக்டர் தகவல்
ADDED : செப் 18, 2011 09:45 PM
அன்னூர் : ''சூலூரில் தாலுகா அலுவலகம் கட்ட 2.36 கோடி ரூபாயில் மதிப்பீடு
தயாரிக்கப்பட்டு, அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது,'' என, கலெக்டர் கருணாகரன்
தெரிவித்தார்.
எஸ்.எஸ்.குளம் அருகே அத்திப்பாளையத்தில் அரசு விழாவில்
பங்கேற்க வந்த கோவை கலெக்டர் கருணாகரன், நிருபர்களிடம் கூறியதாவது: சூலூர்
சந்தை பகுதியில் 2 ஏக்கர் பரப்பளவில், தாலுகா அலுவலகம் கட்ட 2 கோடியே 36
லட்ச ரூபாய்க்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
கிணத்துக்கடவு தாலுகா அலுவலக கட்டடம் கட்ட திட்டம் தயாரிக்கப்பட்டு
வருகிறது. அன்னூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய தாலுகா அமைக்க அரசுக்கு
பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அரசின் முடிவு அறிவிப்புக்கு பிறகு உரிய
நடவடிக்கை எடுக்கப்படும். கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்
பழைய கட்டடங்கள் இடிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனைகளை மிஞ்சும் வகையில்,
50 கோடி ரூபாய் செலவில் 1,000 படுக்கைகள் கொண்ட நவீன வசதியுள்ள புதிய
கட்டடம் கட்டப்பட உள்ளது.இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.வருவாய் துறை, ஊரக
வளர்ச்சித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.