Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/வெங்காயத்தை "ஸ்டாக்' வைக்க விவசாயிகள் ஆயத்தம்

வெங்காயத்தை "ஸ்டாக்' வைக்க விவசாயிகள் ஆயத்தம்

வெங்காயத்தை "ஸ்டாக்' வைக்க விவசாயிகள் ஆயத்தம்

வெங்காயத்தை "ஸ்டாக்' வைக்க விவசாயிகள் ஆயத்தம்

ADDED : ஜூலை 28, 2011 09:42 PM


Google News
பொங்கலூர் : சின்ன வெங்காயம் விலை சரிந்து வருவதால், வெங்காயத்தை இருப்பு வைப்பதற்கான பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். பொங்கலூர் வட்டார பகுதிகளில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் சின்ன வெங்காயம் சாகுபடி செய்துள்ளனர். கடந்த மாதம் ஒரு கிலோ சின்ன வெங்காயம் 28 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது. பின், படிப்படியாக குறைந்து, கடந்த வாரம் கிலோ 16 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது.

தற்போது வெங்காய அறுவடை சீசன் என்பதால், அதிக வரத்து காரணமாக விலை இறங்குமுகத்தில் உள்ளது. வியாபாரிகள் முதல்தர வெங்காயத்தை மட்டுமே விரும்பி கொள்முதல் செய்கின்றனர். இரண்டாம் தர வெங்காயம் கிலோ ரூ.10, 12 என்ற விலைகளில் கொள்முதல் செய்யப்படுகிறது.மிகவும் குறைந்த விலைக்கு விற்பனை செய்தால், நஷ்டம் ஏற்படும் என்பதால், சில விவசாயிகள் வெங்காயத்தை இருப்பு வைக்க முடிவு செய்துள்ளனர். இதற்காக, தற்காலிகமாக, நல்ல காற்றோட்டமுள்ள இடங்களில் பட்டறைகளை அமைத்து வருகின்றனர். ஈரப்பதம் இல்லாமல், இயற்கை முறையில் பாதுகாக்கப்படும் வெங்காயம் மூன்று மாதம் வரை கெட்டுப்போவதில்லை. பாதுகாக்கப்படும் வெங்காயத்தை அடுத்த போகம் சாகுபடி செய்யும் விவசாயிகள், விதைக்காக நல்ல விலை கொடுத்து வாங்கிச்செல்கின்றனர். மேலும், வரும் மாதங்களில் வெங்காய சீசன் முடிவடைவதால், விலை உயர்வு தவிர்க்க முடியாததாக இருக்கும். இதனால், விவசாயிகள் வெங்காயத்தை இருப்பு வைப்பதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us