விருதுநகரில் தினமலர் நிறுவனர் நினைவுநாள்
விருதுநகரில் தினமலர் நிறுவனர் நினைவுநாள்
விருதுநகரில் தினமலர் நிறுவனர் நினைவுநாள்
UPDATED : ஜூலை 21, 2011 11:27 AM
ADDED : ஜூலை 21, 2011 10:54 AM

விருதுநகர் : தினமலர் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் நினைவு நாளை முன்னிட்டு விருதுநகர் சுப்பைய்யா நாடார் மேல்நிலைப்பள்ளியில் பசுமை பாரதம், பள்ளி கல்லூரி சுற்றுச்சூழல் துறை மற்றும் தினமலர் நாளிதழ் ஆகியவவை இணைந்து 'பசுமை புரட்சியில் எம் பங்கு' என்ற தலைப்பில் நடைபெற்ற மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் விருதுநகர் மாவட்ட கலெக்டர் மு.பாலாஜி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது : தினமலர் நாளிதழ், மாணவர்கள் நலனில் அக்கறை கொண்டு ஆண்டுதோறும் ஜெயித்துக்காட்டுவோம் போன்ற வழிகாட்டு நிகழ்ச்சிகளை மிகச் சிறப்பாக நடத்தி வருகிறது; இன்று தினமலர் நிறுவனர் டி.வி.ராமசுப்பையரின் நினைவு நாளை முன்னிட்டு சமுதாயத்திற்கு பயனளிக்கும் வகையில் மரக்கன்றுகளை வழங்கி உள்ளது; பத்திரிக்கை உலகில் மாணவர்களுக்கும், சமுதாயத்திற்கும் பயன்படும் வகையில் பல்வேறு நலப்பணிகளை மேற்கொண்டு வரும் தினமலர் நாளிதழின் சேவை மேன்மேலும் வளர எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கலெக்டர் மு.பாலாஜி தெரிவித்துள்ளார். இவ்விழாவில் எஸ்.எஸ்.ஏ., சி.இ.ஓ., கிரேஸ், சுலோக்சனா, ரத்னாவதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இவ்விழாவை முன்னிட்டு மாவட்டம் தோறும் அரசு பள்ளிகளில் 500 மரக்கன்றுகள் இன்று ஒரே நாளில் நடவும் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.