Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/வாறுகாலில் மனித கழிவுகள்; வீடுகளுக்குள் கழிவு நீர்

வாறுகாலில் மனித கழிவுகள்; வீடுகளுக்குள் கழிவு நீர்

வாறுகாலில் மனித கழிவுகள்; வீடுகளுக்குள் கழிவு நீர்

வாறுகாலில் மனித கழிவுகள்; வீடுகளுக்குள் கழிவு நீர்

ADDED : ஆக 09, 2011 01:13 AM


Google News

விருதுநகர் நகராட்சி 26 வது வார்டில் நீராவி தெரு, நாராயணமடம் தெரு, கயிறுமுறுக்கு தோப்பு, இடும்ப வனம் தெரு, அருளப்பர் தெரு, இன்னாசியார் தெரு, ரோமன் கோயில் தெரு ஆகிய பகுதிகள் உள்ளன.

நீராவி தெருவில் 1991 ல் கட்டப்பட்ட பொது கழிப்பறை, 2001 ல் தான் பயன்பாட்டிற்கு வந்தது. இதை தினம் 500க்கும் மேற்பட்டோர் பயன்படுத்துகின்றனர். ஆனால் கழிப்பறை கட்டடம் பராமரிப்பு இல்லாமல், செப்டிக் டேங்க் சேதமுற்று நிறைந்து வழிகிறது.இதனால் இப்பகுதி மக்கள் வசிக்க முடியாத அளவிற்கு துர் நாற்றம் வீசுகிறது.



இது தொடர்பாக கவுன்சிலர் முதல் அமைச்சர் வரை மனு கொடுத்தும் இன்று வரை நடவடிக்கை இல்லை. இப்பகுதி வழியாக விருதுநகர் நகருக்குள் இருந்து வரும் வாறுகால்கள் வழியாக மனித கழிவுகள் உட்பட அனைத்தும் வருகின்றன. மழை நேரங்களில் வாறுகால்களில் வரும் கழிவு நீர் வீடுகளுக்குள் புகுகிறது. இதை சகிக்க முடியாத நிலையில் இப்பகுதி மக்கள் தவிக்கின்றனர். பல தெருக்களில் ரேடுகள் போடப்படாமல் மழை நேரங்களில் சேறும், சகதியுமாகி பொது மக்கள் நடமாட முடியாத நிலை உள்ளது.



குப்பை தொட்டிசேதமடைந்தும் , நகராட்சி நிர்வாகம் சார்பில் புதிய தொட்டிகள் வைக்கப்படவில்லை. தெருக்களில் குப்பைகளை போடுவதால் சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது. இது தொடர்பாக இப்பகுதியினரின் குமுறல்கள் சில இதோ: எஸ்.பழனிக்குமார்: பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் கழிப்பறைஉள்ளது. மக்கள் குடியிருக்க முடியாத நிலை உள்ளது. அதிகாரிகளிடம் புகார் செய்தும் ர நடவடிக்கை இல்லை .

பி.மாயா: விருதுநகர் பகுதியில் இருந்து வரும் கழிவு நீர் ஓடையில் மனித கழிவு, கோழி இறைச்சி கழிவு என அனைத்தும் வருவதால், மழைக்காலம் வந்து விட்டால் நரக வேதனையை அனுபவிக்கிறோம் .

ஆர்.நாகராஜன்: ஒரு இடத்தில் கூட குப்பை தொட்டி இல்லை. இதனால் தெருக்களில் வீசப்படும் குப்பைகளை நகராட்சி நிர்வாகம் முறையாக அகற்றுவதில்லை.

எ.பொன்னுச்சாமி: பல தெருக்களில் சிமென்ட் ரோடு இல்லாமல் தாழ்வான பகுதியாக உள்ளன. மழை நேரங்களில் சேறும், சகதியுமாகி மக்கள் நடமாட முடியாத நிலை ஏற்படுத்துகிறது.



-நமது சிறப்பு நிருபர் -







      Our Apps Available On




      Dinamalar

      Follow us