Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/தேவையான அளவு கையிருப்பில் அரிசி, கோதுமை : மத்திய உணவுக்கழகம் அறிவிப்பு

தேவையான அளவு கையிருப்பில் அரிசி, கோதுமை : மத்திய உணவுக்கழகம் அறிவிப்பு

தேவையான அளவு கையிருப்பில் அரிசி, கோதுமை : மத்திய உணவுக்கழகம் அறிவிப்பு

தேவையான அளவு கையிருப்பில் அரிசி, கோதுமை : மத்திய உணவுக்கழகம் அறிவிப்பு

ADDED : செப் 07, 2011 11:54 PM


Google News
சென்னை: தமிழகம், புதுவைக்கு தேவையான அரிசி, கோதுமை கையிருப்பில் உள்ளதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய உணவுப்பொருள் வழங்கல் கழக பொதுமேலாளர் ஜெகதீசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பொது வினியோக முறை (ரேஷன்)யில் உணவுப்பொருள் வழங்குவதற்கான உணவுப்பொருட்கள், தேவையான அளவுக்கு, மத்திய உணவுப்பொருட்கள் கழக குடோன்களில் கையிருப்பு உள்ளது. ஆகஸ்ட் 31 நிலவரப்படி, கோதுமை ஒரு லட்சத்து 93 ஆயிரத்து, 662 டன் அளவிலும், அரிசி 8 லட்சத்து, 39 ஆயிரத்து 793 டன் அளவிலும் கையிருப்பு உள்ளது. ஆகஸ்ட் மாதத்தில், தமிழகத்திற்கு 31 ஆயிரத்து 677 டன் கோதுமை, 2 லட்சத்து 17 ஆயிரத்து 566 டன் அரிசியும் வினியோகிக்கப்பட்டுள்ளது. புதுவைக்கு 4,206 டன் அரிசி சப்ளையாகியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us