Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு

டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு

டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு

டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு

ADDED : ஆக 03, 2011 01:49 AM


Google News
பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே மகளிர் சுய உதவிக் குழுவினர்களுக்கு டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.

பரங்கிப்பேட்டை அடுத்த சாமியார்பேட்டை கிராமத்தில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுவினர்களுக்கு மாவட்ட துணை இயக்குனர் மீரா, மாவட்ட மலேரியா அலுவலர் கஜபதி உத்தரவின் பேரில் டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. புதுச்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் சாரா செலின்பால் தலைமை தாங்கினார். சுகாதார மேற்பார்வையாளர் இருதயராஜ் டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பது குறித்து பேசினார். நிகழ்ச்சியில் ஊராட்சி துணைத் தலைவர் சந்திரகலா, பிரகாஷ், உதயராணி, தீபா, சசிகலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us