/உள்ளூர் செய்திகள்/மதுரை/முதியோர் பென்ஷனுக்காக காத்திருக்கும் மூதாட்டிகள் : "கமிஷன்' பெறும் தபால்காரர்கள்முதியோர் பென்ஷனுக்காக காத்திருக்கும் மூதாட்டிகள் : "கமிஷன்' பெறும் தபால்காரர்கள்
முதியோர் பென்ஷனுக்காக காத்திருக்கும் மூதாட்டிகள் : "கமிஷன்' பெறும் தபால்காரர்கள்
முதியோர் பென்ஷனுக்காக காத்திருக்கும் மூதாட்டிகள் : "கமிஷன்' பெறும் தபால்காரர்கள்
முதியோர் பென்ஷனுக்காக காத்திருக்கும் மூதாட்டிகள் : "கமிஷன்' பெறும் தபால்காரர்கள்
மதுரை : முதியோர் பென்ஷன் எப்போது வரும் என தெரியாததால், தள்ளாத வயதிலும் மூதாட்டிகள் அரசரடி தபால் அலுவலகத்திற்கு தினமும் வந்து செல்லும் அவலம் தொடர்கிறது.
மூதாட்டிகளிடம் கேட்டபோது, ' இந்தப் பணம் தான் எங்களை வாழவைக்குது. ஆனால் இதுக்காக அலையறது ரொம்ப கஷ்டமா இருக்கு. நடக்க முடியல. வர்றலேனா... பணம் கெடைக்காது. மாசக்கடைசியில தர்றத, கொஞ்சம் முன்கூட்டியே தரலாம். பணம் என்னைக்கு கிடைக்கும்னு ஒரு தேதிய சொல்லிட்டா, வயசான எங்களுக்கு அலைச்சல் குறையும். தபால்காரர் அவருக்குரிய பணத்தை எடுத்துட்டு, எங்ககிட்ட மீதிய தருவார். சிலநேரம் நாங்களா பார்த்து 20, 30 ரூபா தருவோம். ஒவ்வொரு தபால்காரரும் ஒவ்வொரு மாதிரி. ஆனா எங்க நிலைம தான் மாற மாட்டேங்குது. பிள்ளைங்கள விட்டுட்டு, எங்கயோ கெடைச்ச இடத்துல ஒதுங்கிட்டு,
முடிஞ்சளவு வீட்டு வேல செய்யற எங்கள அலைய விடாம செஞ்சா நல்லாருக்கும்,' என ஆதங்கத்தோடு தெரிவித்தனர். மாதம் பல ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் தபால்காரர்கள், முதியோர்களின் பென்ஷன் பணத்தில் 'கமிஷன்' கேட்பது தான் வேதனையாக இருக்கிறது. தபால் துறை அதிகாரிகள் இவ்விஷயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். குறிப்பிட்ட தேதியில் பென்ஷன் பணம் கிடைக்கும் என தெரிவித்தால், தேவையற்ற அலைச்சலையும் தவிர்க்கலாம்.