/உள்ளூர் செய்திகள்/சேலம்/33 ஊராட்சி தலைவர்களுக்கு "ஆப்பு' தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படுமா?33 ஊராட்சி தலைவர்களுக்கு "ஆப்பு' தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படுமா?
33 ஊராட்சி தலைவர்களுக்கு "ஆப்பு' தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படுமா?
33 ஊராட்சி தலைவர்களுக்கு "ஆப்பு' தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படுமா?
33 ஊராட்சி தலைவர்களுக்கு "ஆப்பு' தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படுமா?
சேலம்: சேலம் மாவட்டத்தில், திட்ட நிதியை சுருட்டிய, 33 ஊராட்சி தலைவர்கள், தேர்தலில் போட்டியிட தடை விதிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.சேலம் மாவட்டத்தில், 385 ஊராட்சிகள் உள்ளன.
மாஜி மந்திரி வீரபாண்டி ஆறுமுகத்தின் ஆதரவு இருந்ததால், ஊராட்சி தலைவர்களை கண்டு அதிகாரிகள் அஞ்சினர். இலவசமாக வழங்கப்பட்ட கலர் 'டிவி', காஸ் அடுப்பு, வேளாண் நிலம் போன்றவற்றை அபகரித்து, தலைவரும், வார்டு உறுப்பினர்களும் பங்கு போடும் நிலை இருந்தது. ஊராட்சி மன்ற தலைவர் கட்டுப்பாட்டில் இருந்த கிராம உதவியாளர்களும், இதற்கு துணைபோகினர். மற்ற மாவட்டங்களை விட, சேலத்தில் ஊராட்சி நிதியானது பல லட்சம் ரூபாய் சுருட்டப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு, தாசில்தார் சித்ரா தலைமையில் இது தொடர்பாக விசாரணை நடத்துமாறு, அப்போதைய கலெக்டர் சந்திரகுமார் உத்தரவிட்டார். மாவட்டத்தில் உள்ள, 33 ஒன்றியங்களில், பனமரத்துப்பட்டி, பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் தான் அதிக மோசடிகள் நடந்துள்ளன. பனமரத்துப்பட்டி ஒன்றியத்தில் உள்ள, 20 ஒன்றியங்களில், பெரமனூர் தவிர மற்ற ஊராட்சிகள் அனைத்திலும் முறைகேடு நடந்துள்ளன.
இது குறித்து மாஜி சேலம் தாசில்தார் சுப்பிரமணியன் கூறியதாவது: சேலம் தாசில்தாராக பணியாற்றியபோது, பனமரத்துப்பட்டி ஒன்றியங்களில் உள்ள ஊராட்சிகளில் நடந்த முறைகேடு குறித்து உறுப்பினர்களிடம் கருத்து கேட்டு அறிக்கை தருமாறு கலெக்டர் உத்தரவிட்டிருந்தார். அதனடிப்படையில், வார்டு உறுப்பினர்களிடம் கேட்டறிந்தேன்.


