/உள்ளூர் செய்திகள்/கடலூர்/மத்திய அரசு ஒரு கிலோ ரேஷன் அரிசிக்கு ரூ.16 மானியம் வழங்குகிறது: அழகிரி எம்.பி.,மத்திய அரசு ஒரு கிலோ ரேஷன் அரிசிக்கு ரூ.16 மானியம் வழங்குகிறது: அழகிரி எம்.பி.,
மத்திய அரசு ஒரு கிலோ ரேஷன் அரிசிக்கு ரூ.16 மானியம் வழங்குகிறது: அழகிரி எம்.பி.,
மத்திய அரசு ஒரு கிலோ ரேஷன் அரிசிக்கு ரூ.16 மானியம் வழங்குகிறது: அழகிரி எம்.பி.,
மத்திய அரசு ஒரு கிலோ ரேஷன் அரிசிக்கு ரூ.16 மானியம் வழங்குகிறது: அழகிரி எம்.பி.,
ADDED : செப் 16, 2011 12:17 AM
பண்ருட்டி:மத்திய அரசு ஒரு கிலோ ரேஷன் அரிசிக்கு 16 ரூபாய் மானியம்
வழங்குகிறது என கடலூர் அழகிரி எம்.பி., நேற்று பேசினார்.பண்ருட்டி தொகுதி
சிறுபான்மை பிரிவு சார்பில் காங்., கூட்டணி கட்சியின் சாதனை விளக்கம்
மற்றும் மத்திய அமைச்சர் சிதம்பரம் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்
பண்ருட்டி இந்திரா காந்தி சாலையில் நேற்று முன்தினம் நடந்தது.
சிறுபான்மைபிரிவு மாநில செயலாளர் சம்சுதீன், இளைஞர் காங்., லோக்சபா தலைவர்
வனிதா, பண்ருட்டி தொகுதி தலைவர் லிஸிஜோஸ்பின் முன்னிலை வகித்தனர். மாநில
தலைமை நிலைய பேச்சாளர் ஆலடி சங்கரய்யா சிறப்புரையாற்றினார். கூட்டத்திற்கு
தலைமை தாங்கி அழகிரி எம்.பி., பேசியதாவது :-மத்திய அமைச்சர் சிதம்பரம் நிதி
அமைச்சராக பொறுப்பேற்ற பின்பு உயர்கல்வியில் மாணவர்கள் பயன் பெற வேண்டும்
என்கிற நோக்கில் மிகசிறந்த கல்வி கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தி 40
ஆயிரம் கோடி அளவில் கல்வி கடன் வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஒரு கிலோ
அரிசிக்கு 16 ரூபாய் மானியம் வழங்குகிறது.அதன்மூலமே தற்போது அரசு 3 ரூபாய்
மானியம் வழங்கி அரிசியை இலவசமாக வழங்குகிறது. மத்திய அரசின் சாலைகள்
சிறப்பாக போடப்பட்டுள்ளன. அதை போல மாநில அரசுகள் சாலைகளை ஏன் போடவில்லை.
இந்தியாவில் தமிழகம் தான் விவசாயம் உள்ளிட்ட அனைத்திலும் முன்னிலை என இரு
கட்சிகள் ஆண்ட தமிழக அரசு கூறி வருகிறது. இன்று பஞ்சாப்பில் ஒரு போகம்
கோதுமை, மற்றொரு போகம் நெல் பயிரிட்டு முன்னிலை பெற்று வருகிறது.தமிழ்,
தமிழர்கள் என கூறிக்கொள்பவர்கள் அடுக்கு மொழி பேசி, வீராவசனம் பேசி, பொய்
பேசி வீணாக்கி வருகின்றனர். ஏன் குஜராத், பஞ்சாப் வளர்ச்சி போன்று
இவர்களால் பெற முடியவில்லை. ஈழத்தமிழர்களுக்காக இலங்கை அரசுடன்
பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு ஏற்படுத்தி தர ராஜீவ்காந்தி தான் முயற்சி
செய்து ஏற்படுத்தினார். அவரையே கொலை செய்தது விடுதலைபுலிகள். கொலையில்
தூக்குதண்டனை விதித்தவர்களுக்கு ஆதரவாக சாந்தன், பேரறிவாளன், முருகன்
தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என கோருகின்றனர்.
தமிழர் என்றால் தவறு செய்பவர்களை மன்னிக்க வேண்டுமா?. தற்போது இலங்கை சீனாவின் ஆதரவில் உள்ளதால் அவர்களை அடிபணிய வைக்க முடியாது.
இலங்கை தமிழர்களுக்கு சம அதிகாரம் பெற்றுத் தர வேண்டுமெனில் அமெரிக்கா,
ஐரோப்பா உதவி பெற்றால் தான் தமிழர்களுக்கு சம அதிகாரம் கிடைக்கும். இதற்கு
வைகோ, சீமான் வாயை மூட வேண்டும்.கொலைகார கும்பலுக்கு எப்படி ஆதரவளிக்க
முடியும். தமிழ், தமிழர் என்கிற பெயரில் கொலைகாரனுக்காக விவாதித்தால்
தமிழும் உங்களை மன்னிக்காது. தமிழர்களும் மன்னிக்கமாட்டார்கள் என பேசினார்.


