/உள்ளூர் செய்திகள்/கரூர்/காவிரியாற்றில் அதிக மணல் எடுப்பதால் நீர்வளம் பாதிப்புகாவிரியாற்றில் அதிக மணல் எடுப்பதால் நீர்வளம் பாதிப்பு
காவிரியாற்றில் அதிக மணல் எடுப்பதால் நீர்வளம் பாதிப்பு
காவிரியாற்றில் அதிக மணல் எடுப்பதால் நீர்வளம் பாதிப்பு
காவிரியாற்றில் அதிக மணல் எடுப்பதால் நீர்வளம் பாதிப்பு
ADDED : ஆக 08, 2011 02:52 AM
கரூர்: 'காவிரியாற்றில் அதிகமாக மணல் எடுப்பதால் நீர்வள ஆதாரங்கள் பாதிக்கப்பட்டு வருகிறது' அகில பாரதிய துறவியர் சங்க நிர்வாகிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
கரூரில் காவிரி தீர்த்த யாத்திரை குழுவை சேர்ந்த சுவாமி ராமானந்த், கணேஷ் சொருபானந்தா ஆகியோர் கூறியதாவது: கங்கை நதியை சுத்தப்படுத்த கங்கா யாத்திரை நடந்து வருகிறது. அதேபோல் காவிரியாற்றை பாதுகாக்க அகில பாரதிய துறவியர் சங்கத்தினர் சார்பில் காவிரி தீர்த்த யாத்திரை நடக்கிறது. வரும் அக்டோபர் மாதம் 23ம் தேதி கர்நாடகா மாநிலம் தலைகாவிரியில் யாத்திரையை உடுப்பி பேஜாவர் சுவாமிகள் தொடங்கி வைக்கிறார். 700 கிலோ மீட்டர் தூரம் உள்ள காவிரி நதி மூலம் சுமார் நான்கு கோடி மக்களுக்கு குடிநீர் தேவை மற்றும் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதியை பெற ஆதாரமாக உள்ளது. ஆலைக்கழிவு, பொதுமக்களால் போடப்படும் குப்பைகள், கழிவு நீர் கலப்பு, அதிக மணல் எடுப்பது உள்ளிட்ட காரணங்களால் நிதி மாசுப்பட்டு, நீர் வள ஆதாரங்கள் அழிந்து போய் வருகிறது. இதனால் காவிரியாற்றை காக்க காவிரி தீர்த்த யாத்திரை நடத்தப்படுகிறது. அப்போது காலையில் ஊர்வலம், பகலில் கருத்தரங்கம், மாலையில் காவிரியாற்றுக்கு ஆரத்தி எடுத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. காவிரியாற்றை பாதுகாக்க தமிழக அரசு, படித்துறைகளை சீரமைத்து, மரக்கன்றுகளை நட வேண்டும். மணல் அள்ள விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை சரியாக பின்பற்ற வேண்டும். தமிழகத்தில் நவம்பர் இரண்டாம் தேதி யாத்திரை ஒகேனக்கல் வழியாக நுழைகிறது. கரூருக்கு நவம்பர் 5ம் தேதி யாத்திரை வருகிறது. நவம்பர் 11ம் தேதி பூம்புகாரில் காவிரி தீர்த்த யாத்திரை முடிகிறது. யாத்திரையில் திருவாடுதுறை, தருமபுரம், திருப்பனந்தாள், பேரூர், கவுராமடம், ராமகிருஷ்ண தபோவனம், திருஈங்கோய்மலை, மடாதிபதிகள் மற்றும் பொது நல அமைப்பினர் பங்கேற்கின்றனர்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். பேட்டியின் போது கரூர் ராமகிருஷ்ண தபோவனம் சுவாமி போதானந்தா, பாவை ராமச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.


