ADDED : ஜூலை 24, 2011 09:11 PM
திண்டுக்கல் : பேகம்பூரில் பாரதி புத்தகாலயம் சார்பில் புத்தக கண்காட்சி துவக்க விழா நடந்தது.
நாட்டாமை காஜா தலைமை வகித்தார். கே. ஏ.ஆர்., தோல் தொழிற்சாலை நிர்வாக இயக்குனர் மொகைதீன் துவக்கி வைத்தார். பாரதி புத்தகாலய முகமது அனீபா, அரபு முகமது முன்னிலை வகித்தனர். தோல் ஏற்றுமதி நிறுவன ஷாஜஹான், முகமது இப்ராஹிம், ஜாகிர் உசேன், ஜபருல்லா, இக்பால், மைதீன் பாட்சா, ஷேக் முகமது பங்கேற்றனர்.