/உள்ளூர் செய்திகள்/வேலூர்/ஹஜ் பயணத்துக்கு 5,049 பேர் தேர்வு :அமைச்சர் முகம்மது ஜான் தகவல்ஹஜ் பயணத்துக்கு 5,049 பேர் தேர்வு :அமைச்சர் முகம்மது ஜான் தகவல்
ஹஜ் பயணத்துக்கு 5,049 பேர் தேர்வு :அமைச்சர் முகம்மது ஜான் தகவல்
ஹஜ் பயணத்துக்கு 5,049 பேர் தேர்வு :அமைச்சர் முகம்மது ஜான் தகவல்
ஹஜ் பயணத்துக்கு 5,049 பேர் தேர்வு :அமைச்சர் முகம்மது ஜான் தகவல்
ADDED : ஜூலை 14, 2011 11:47 PM
வேலூர்: ''இந்தாண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள, 5,049 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்,'' என அமைச்சர் முகம்மது ஜான் கூறினார்.
வாணியம்பாடியில் மதரஸா - எ - முபிதே - ஆம் பள்ளியில் ஹஜ் பயணிகளுக்கான பயிற்சி முகாம் துவக்கவிழா நடந்தது. சலம் கார் அப்துல் கதீர் தலைமை வகித்தார். நானாவரம் நிஸார் அஹமத் வரவேற்றார். பயிற்சி முகாமை துவக்கி வைத்த அமைச்சர் முகம்மது ஜான் கூறியதாவது: தமிழகத்தில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ள இந்தாண்டு, 10,458 பேர் விண்ணப்பித்தனர். அதில், 3,049 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மூன்று ஆண்டுகள் தொடர்ந்து மனு செய்து காத்திருப்பவர்களும், 70 வயது நிரம்பியவர்களும் என, 800 பேரும், மற்ற பிரிவில், 2,000 பேர் உள்ளிட்ட மொத்தம், 5,049 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். கூடுதலான இடங்களை தமிழர்களுக்கு ஒதுக்கித் தர வேண்டும் என, தமிழக முதல்வர் மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளார். பிற மாநிலத்தில் ஹஜ் பயணிகள் குறைந்தால், அந்த இடங்களை தமிழகத்துக்கு வழங்குமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் பயணிகள், அங்கு மேற்கொள்ள வேண்டிய தொழுகைகள் குறித்த பயிற்சியில் பங்கேற்று, அதை முழுமையாக கடைபிடித்து புனித பயணத்தை நிறைவு செய்ய வேண்டும். ஹஜ் பயணம் செய்யும், 40 நாட்களும் மிகவும் புனிதமானது. எம்.எல்.ஏ., பதவில் இருந்து அமைச்சர் பதவிக்கு உயர்த்திய தமிழக முதல்வருக்கும், எனக்கும் பிரார்த்தனை செய்யுங்கள். இவ்வாறு அவர் கூறினார். கொலந்தாளம் அஹீபாக், பெரியாங்குப்பம் அஹீமத் சலிம், அக்பர் சாயித், ஜம்பு முக்தியார், வாணியம்பாடி எம்.எல்.ஏ., சம்பத் குமார், ஜோலார் பேட்டை எம்.எல்.ஏ., வீரமணி, அ.தி.மு.க., நகர செயலாளர் பழனிசாமி, டி.எஸ்.பி., அப்துல்லா, தாசில்தார் தங்கவேலு உட்பட பலர் கலந்து கொண்டனர். டாக்டர் அன்வருல்லா நன்றி கூறினார்.