/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ஈரோடு கனி மார்க்கெட்டில்கல்வி உபகரணம்வழங்கும் விழாஈரோடு கனி மார்க்கெட்டில்கல்வி உபகரணம்வழங்கும் விழா
ஈரோடு கனி மார்க்கெட்டில்கல்வி உபகரணம்வழங்கும் விழா
ஈரோடு கனி மார்க்கெட்டில்கல்வி உபகரணம்வழங்கும் விழா
ஈரோடு கனி மார்க்கெட்டில்கல்வி உபகரணம்வழங்கும் விழா
ADDED : ஜூலை 17, 2011 02:27 AM
ஈரோடு: ஈரோடு கனி மார்க்கெட் தினசரி அனைத்து சிறு ஜவுளி வியாபாரிகள் சங்கம்
சார்பில் மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கும் விழா நடந்தது.
ஈரோடு மாவட்டம் அரசு பள்ளியில் படிக்கும் ஏழை, எளிய மாணவ, மாணவியர்களுக்கு
இரண்டாம் ஆண்டு இலவச நோட்டு புத்தகம் வழங்கும் விழா மற்றும் ரத்த தானம்
செய்த உறுப்பினர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா ஈரோடு கனி மார்க்கெட்டில்
நடந்தது.அனைத்து வணிகர் கூட்டமைப்பு சங்க தலைவர் சிவனேசன் தலைமை
வகித்தார். குமாரபாளையம் ராஜமாணிக்கம் முன்னிலை வகித்தார். தினசரி
வியாபாரிகள் சங்க தலைவர் நூர்சேட் வரவேற்றார்.வேளாளர் கல்லூரி நிறுவனர்
சந்திரசேகர், 366 மாணவ, மாணவியருக்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள
நோட்டுகளை வழங்கினார். ரத்த தானம் வழங்கிய கனி மார்க்கெட் தினசரி
வியாபாரிகள் சங்க உறுப்பினர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.அனைத்து
வணிகர் சங்கம் பொதுச்செயலாளர் ஜெகதீசன், பொருளாளர் ராஜமாணிக்கம் மற்றும்
வியாபாரிகள் சங்க உறுப்பினர்கள் உள்பட பெற்றோர்கள் பலர் பங்கேற்றனர். இணைச்
செயலாளர் செல்வராஜ் நன்றி கூறினார்.