/உள்ளூர் செய்திகள்/கடலூர்/சிறு பாலங்கள் கட்டும் பணியை தடுத்ததால் பரபரப்புசிறு பாலங்கள் கட்டும் பணியை தடுத்ததால் பரபரப்பு
சிறு பாலங்கள் கட்டும் பணியை தடுத்ததால் பரபரப்பு
சிறு பாலங்கள் கட்டும் பணியை தடுத்ததால் பரபரப்பு
சிறு பாலங்கள் கட்டும் பணியை தடுத்ததால் பரபரப்பு
ADDED : ஜூலை 16, 2011 02:21 AM
கிள்ளை:சிதம்பரம் அருகே பொதுப்பணித்துறை மேற்பார்வையில் கட்டப்படும் சிறு
பாலங்களை தரமாக கட்டக்கோரி விவசாயிகள் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சிதம்பரம் அருகே நஞ்சைமகத்துவாழ்க்கை பகுதியில் மழைக்காலங்களில் கான்சாகிப்
வாய்க்காலில் இருந்து பிரியும் கிளை வாய்க்கால்கள் மூலம் வரும் தண்ணீர்
வடியாமல் விவசாயிகள் பாதிப்பிற்குள்ளாகி வந்தனர். விவசாயிகளின்
கோரிக்கையைத் தொடர்ந்து சிதம்பரநாதன்பேட்டை வாய்க்கால், நக்கரவந்தன்குடி
கருங்காளி வாய்க்கால்களில் இருந்து 10க்கும் மேற்பட்ட சிறு பாலங்களை சரி
செய்யும் பணி துவங்கியது.காரைக்காட்டுச்சாவடி சாலை நஞ்சை மகத்துவாழ்க்கை
(கிழக்கு) பகுதியில் கிடப்பில் போடப்பட்ட சிறுபாலம் பணியை நேற்று
துவக்கினர். பணி தரமில்லாததால் அப்பகுதி விவசாயிகள் தரமாக அமைக்க வேண்டும்
எனக் கூறி தடுத்தனர். இதனால் பரபரப்பு நிலவியது. அதனைத் தொடர்ந்து பணி
நிறுத்தப்பட்டது.