ரீமாசென்னுக்கு விரைவில் டும் டும் டும்
ரீமாசென்னுக்கு விரைவில் டும் டும் டும்
ரீமாசென்னுக்கு விரைவில் டும் டும் டும்
ADDED : செப் 05, 2011 02:45 PM

'மே மாதம் 98ல் மேஜர் ஆனானே' என்று ஜேஜே படத்தில் ஒரு பாட்டிற்கு ஆட்டம் போட்ட ரீமா சென்னுக்கு விரைவில் கால் கட்டு போடப்படுகிறதாம். தமிழ், தெலுங்கு, இந்தி, வங்காளம் என மாறி மாறி கலக்கிக் கொண்டிருக்கும் ரீமா சென் டில்லியைச் சேர்ந்த ஓட்டல் அதிபர் ஷிவ் கரண் சிங்கை மணக்கிறார். அண்மையில் நடந்த இந்தியா மென்ஸ் வீக் என்ற பேஷன் ஷோ நிகழ்ச்சியில் ஷிவ் கரண் சிங், ரேம்பில் அசத்திக் கொண்டிருக்க முதல் வரிசையில் அமர்ந்து விசில் அடிக்காத குறையாக உற்சாகப்படுத்திக் கொண்டிருந்திருக்கிறார் ரீமா சென்.
ஷோ முடிந்தவுட்ன் ரீமாவை பத்திரிகையாளர்கள் மொய்த்துக் கொள்ள ' ஆமாம் நான் ஷிவ் கரண் சிங்கை' திருமணம் செய்து கொள்ளப் போகிறேன். எங்கள் காதலுக்கு வீட்டில் பச்சைக் கொடி காட்டி விட்டார்கள்.எங்கள் திருமண தேதியை நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால் அடுத்த ஆண்டு திருமணம் செய்து கொள்வோம் என்றார் ரீமா.
வருங்கால கணவரை அறிமுகப்படுத்திய ரீமா, தனக்கு பஞ்சாபி உணவு, பஞ்சாபி உடை என பஞ்சாப் சார்ந்த அனைத்தும் ரொம்ப பிடிக்கும் என்றார். அப்புறம் தான் தெரிந்தது ஷிவ் கரண் சிங் பஞ்சாபியர் என்ற விஷயம். திருமணத்துக்குப் பிறகு டில்லியில் நிரந்தரமாக செட்டில் ஆகிவிடப்போவதாகவும் ரீமா கூறினார்.


