/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/உழவர்மன்ற அமைப்பாளர்களுக்கு பயிற்சிஉழவர்மன்ற அமைப்பாளர்களுக்கு பயிற்சி
உழவர்மன்ற அமைப்பாளர்களுக்கு பயிற்சி
உழவர்மன்ற அமைப்பாளர்களுக்கு பயிற்சி
உழவர்மன்ற அமைப்பாளர்களுக்கு பயிற்சி
ADDED : ஜூலை 12, 2011 12:24 AM
சாத்தான்குளம் : விவசாயத்தில் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து உழவர்மன்ற அமைப்பாளர்களுக்கு சாத்தான்குளத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.
சாத்தான்குளம் வேளாண்மை விரிவாக்க மையத்தில் வைத்து புதிய தொழில் நுட்பங்கள் குறித்த பயிற்சி உழவர் மன்ற அமைப்பாளர்களுக்கு தூத்துக்குடி உழவர் பயிற்சி நிலையம் சார்பில் அளிக்கப்பட்டது.
பயிற்சியில் வேளாண்மை துணை இயக்குநர் குருமூர்த்தி, வேளாண்மை அலுவலர் பூவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய தொழில் நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர். பயிற்சியில் செம்மை கரும்பு சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் செம்மை நெல் சாகுபடி முறை பற்றி நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியில் நுண்ணூட்ட உரம் பயன்பாடுகள் குறித்து குருமூர்த்தி பேசினார். மேலும் சாத்தான்குளம் தோட்டக்கலை உதவி இயக்குனர் சுதர்சன் கலந்து கொண்டு தென்னை டானிக் உபயோகிப்பது குறித்து தென்னை விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார். சென்னை டானிக் 1 லிட்டரை 4 லிட்டர் நீரில் கலந்து ஒரு மரத்திற்கு 200 மி.லி.வீதம் 25 தென்னை மரங்களுக்கு பயன்படுத்த வேண்டும். இதனை பயன்படுத்துவதன் மூலம் மரத்தில் குரும்பு உதிர்வதை தடுக்கலாம். இதனால் தேங்காய் உற்பத்தி பெருகும். விவசாயிகளுக்கு தென்னை டானிக் தேவைப்பட்டால் அருகில் உள்ள வேளாண்துறை அலுவலகத்தை தொடர்பு கொண்டு பெறலாம் என கூறினார்.
பயிற்சியில் கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் சரவணன், வெங்கடேஷ், பொன்பெருமாள், பிரபாகரன், ஹேம்ராஜ் நாகர், ராம் பிரதாப் சாகர் கலந்து கொண்டு முருங்கையில் புதிய தொழில் நுட்பங்கள் குறித்து பயிற்சி அளித்தனர். முருங்கையில் தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் வாழை, முந்திரி, காய்கறிகளில் நோய்கள், சத்து குறைபாடுகள் போன்றவற்றை கண்டறிவது பற்றி கண்காட்சி நடத்தினர். மேலும் வேளாண்துறை சார்பில் வேளாண்மை உதவி இயக்குநர் கதிரேசன், வேளாண்மை அலுவலர் திருச்செல்வன் கலந்து கொண்டு வேளாண்துறை சார்பில் செயல்படும் திட்டங்கள் குறித்து பேசினர்.