/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/நூலகங்களில் நிரந்தர நூலகர் இல்லை: பணிகள் முடக்கம்நூலகங்களில் நிரந்தர நூலகர் இல்லை: பணிகள் முடக்கம்
நூலகங்களில் நிரந்தர நூலகர் இல்லை: பணிகள் முடக்கம்
நூலகங்களில் நிரந்தர நூலகர் இல்லை: பணிகள் முடக்கம்
நூலகங்களில் நிரந்தர நூலகர் இல்லை: பணிகள் முடக்கம்
ADDED : ஜூலை 11, 2011 09:50 PM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி தாலுகாவுக்கு உட்பட்ட மூன்று நூலகங்களில் நிரந்தர
நூலகர்கள் நியமிக்கப்படாததால், நூலக பணிகள் முடங்கியுள்ளன.பொள்ளாச்சி
நூலகத்துறையினர் கூறியதாவது: பொள்ளாச்சி அடுத்த சுப்பையன்கவுண்டன்புதூர்,
சமத்தூர், காடம்பாறை பகுதிகளில் பொதுநூலகத் துறை சார்பில் நூலகங்கள்
அமைக்கப்பட்டுள்ளன.
கடந்த 2005ம் ஆண்டு வரை இந்த நூலகங்களுக்கு நிரந்தர
நூலகர்கள் இருந்தனர். அதற்கு பின் நூலகங்களுக்கு வழங்கப்படும் நிதி, அரசு
நிதி மற்றும் நூலக நிதி என பிரிக்கப்பட்ட பின் நிரந்தர நூலகர்கள்
நியமிக்கப்படவில்லை.இதனால், தனியாக கூலி பணியாளர்கள்
நியமிக்கப்பட்டுள்ளனர். வாசகர்கள் வரும்போது புத்தகங்கள் எடுத்து தருவது
மற்றும் பதிவு செய்வதுடன் அவர்களின் வேலை முடிந்தது. ஆனால், மற்ற பொது
நூலகங்களில் பணியாற்றும் கூடுதல் பணியாளர்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை இந்த
நூலகங்களுக்கு சென்று அவர்களின் பணிகளை செய்து வருகின்றனர். இங்கிருக்கும்
ரசீது வழங்குதல், பணம் பட்டுவாடா செயல்கள் போன்றவை கூடுதல் நூலகர்களால்
செய்யப்பட்டு வருகிறது. இதனால், பல சமயங்களில் பணிகள் முடங்கும் நிலை
உள்ளது, என்றனர்.