/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/விடாது கருப்பாக துரத்தும் போட்டோ விவகாரம் :தி.மு.க., - அ.தி.மு.க., கவுன்சிலர்கள் காரசாரம்விடாது கருப்பாக துரத்தும் போட்டோ விவகாரம் :தி.மு.க., - அ.தி.மு.க., கவுன்சிலர்கள் காரசாரம்
விடாது கருப்பாக துரத்தும் போட்டோ விவகாரம் :தி.மு.க., - அ.தி.மு.க., கவுன்சிலர்கள் காரசாரம்
விடாது கருப்பாக துரத்தும் போட்டோ விவகாரம் :தி.மு.க., - அ.தி.மு.க., கவுன்சிலர்கள் காரசாரம்
விடாது கருப்பாக துரத்தும் போட்டோ விவகாரம் :தி.மு.க., - அ.தி.மு.க., கவுன்சிலர்கள் காரசாரம்
ADDED : ஜூலை 11, 2011 09:46 PM
கோவை : மாநகராட்சி அலுவலகங்களில் முதல்வர் ஜெயலலிதா போட்டோ மாட்டுவது
மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்தை அகற்றும் விவகாரத்தை
தி.மு.க.,வினர் விடுவதாயில்லை.
நேற்று நடந்த அவசரக்கூட்டத்தில் மேயரை
தி.மு.க., வினர் கருப்புச்சட்டை அணிந்து வந்து முற்றுகையிட்டனர். பதிலுக்கு
அ.தி.மு.க.,வினரும் முற்றுகையிட வாக்குவாதம் ஏற்பட்டு, பரபரப்பானது.ஆட்சி
மாற்றம் ஏற்பட்டதும், அரசு அலுவலகங்களில் முதல்வர் ஜெயலலிதாவின்
போட்டோக்கள் மாட்டப்படுகின்றன. இது வழக்கமான நடைமுறை. மாநகராட்சி தெற்கு
மண்டல அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படம் மட்டுமே
இருந்தது. அங்கு புகுந்த எம்.எல்.ஏ., துரை கருணாநிதியின் படத்தை அகற்றி
விட்டு, ஜெயலலிதா படத்தை அதிரடியாக மாட்டினார்.இதேபோல், மேயரின்
அலுவலகத்துக்குள் ஜெ., படம் சிறிதாகவும், கருணாநிதி, சோனியாவின் படங்கள்
பெரிதாகவும் மாட் டப்பட்டிருந்தன. இதனால் ஆவேசமடைந்த அ.தி.மு.க.,வினர்,
எம். எல்.ஏ., மலரவன் தலைமையில் மேயரின் அறையில் புகுந்து அதே அதிரடியில்
ஈடுபட்டனர். இதற்கு தி.மு.க.,வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று
மாநகராட்சி எல்லை விரிவாக்கம் குறித்த அவசரக் கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்துக்கு தி.மு.க., கவுன்சிலர்கள் கருப்புச்சட்டை அணிந்து
பங்கேற்றனர்.கூட்டம் துவங்கியதும், எதிர்க்கட்சித் தலைவர் உதயகுமார்,
துணைமேயர் கார்த்திக், மண்டல தலைவர்கள் செல்வராஜ், சாமி, பைந்தமிழ் பாரி
உள்ளிட்டோர் மேயரை முற்றுகையிட்டு, 'மாநகராட்சி நிர்வாகத்தில் அ.தி.
மு.க.,வினரின் தலையீடு அதிகரித்துள்ளது. கருணாநிதியின் படத்தை அகற்றிய
அ.தி.மு.க., எம்.எல். ஏ.,க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக்கூறி,
கோஷமிட்டனர். பதிலுக்கு அ.தி.மு.க., கவுன்சிலர்கள் நடராஜ், பிரபாகரன்,
மெகர்பான் ஆகி யோரும் மேயரின் அருகே சென்று, 'தி.மு.க., வினர் மீதுதான்
நடவடிக்கை எடுக்க வேண்டும். மண்டல அலுவலகங் களில் முதல்வர் படத்தை மாட்ட
மறுக்கின்றனர்' என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தி.மு.க.,வினர்
அ.தி. மு.க., வினரைப் பார்த்து 'ஊழல் ஆட்சி, அராஜக ஆட்சி' எனக்
கோஷமிட்டதால், தள்ளுமுள்ளு ஏற்படும் நிலை உருவானது. பிறகு வழக்கம் போல்
இருதரப்பினரும் தத்தமது எதிர்ப்பைப் பதிவு செய்து விட்ட 'திருப்தி'யில்
அவசரக் கூட்டத்தில் பங்கேற்றனர்.