ADDED : ஜூலை 15, 2011 12:45 AM
கோபிசெட்டிபாளையம்: கோபி ஆர்.டி.ஓ., ஜெயக்குமார் உத்தரவுப்படி, ஆய்வாளர்கள் ரகுபதி, பாமாபிரியா, சிங்கராவேலு, நடேசன், லீலாவதி, சண்முகம் ஆகியோர் கோபி, சத்தி ஆகிய பகுதிகளில் திடீர் வாகன சோதனை மேற்கொண்டனர்.
கேரளா மற்றும் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த வாகனங்கள் தமிழக நுழைவு வரி செலுத்தாமல் இயக்கியதால், மூன்று வாகனங்களுக்கு 9,250 ரூபாய் வரியாக வசூலிக்கப்பட்டது. தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட இரு வாகனங்கள் அரசுக்கு வரி செலுத்தாமல் கண்டறியப்பட்டு, 10 ஆயிரம் வரி வசூல் செய்யப்பட்டது. அளவுக்கு அதிகமாக ஆட்கள் ஏற்றிச்சென்ற நான்கு வாகனங்கள், அதிக குழந்தைகள் ஏற்றிச்சென்ற மூன்று பள்ளி வாகனங்கள் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.