Dinamalar-Logo
Dinamalar Logo

/செய்திகள்/தமிழகம்/சென்னையும் நாடகக் கலையின் பிதாமகனும்

சென்னையும் நாடகக் கலையின் பிதாமகனும்

சென்னையும் நாடகக் கலையின் பிதாமகனும்

சென்னையும் நாடகக் கலையின் பிதாமகனும்

ADDED : ஆக 17, 2011 06:13 PM

Google News

முத்தமிழில் ஒன்று நாடகத்தமிழ் எனும் போதே, தமிழ் நாடகத்துறையின் பழமை பற்றி அறிந்து கொள்ள முடியும். நவீன கால தமிழ் நாடககக்கலையின் தந்தையாக பம்மல் சம்பந்த முதலியார் அறியப்படுகிறார். சம்பந்த முதலியார் சென்னையை அடுத்துள்ள பம்மல் எனும் ஊரில் 1873 பிப். 1ம் தேதி பிறந்தார். சென்னை மாநிலக்கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றார்.

சங்கரதாஸ் சுவாமிகளும், சம்பந்த முதலியாரும் இத்துறையில் நுழைந்ததனால், நாடகத்துறை வளர்ச்சி பெற்றது. வழக்கறிஞராக, நீதிபதியாக புகழ்பெறும் முன்னரே, நாடகத்துறையில் சிறந்து விளங்கினார் சம்பந்த முதலியார்.1891 ஜூலை முதல் தேதி 'சுகுணவிலாஸ சபா' நிறுவப்பட்டது. பல்லாரி கிருஷ்ணமாச்சாரி என்பவர், ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வந்து விக்டோரியா நினைவரங்கத்தில் தெலுங்கு மொழியில் சில நாடகங்களை நடத்தினார்.

இந்நிகழ்ச்சியே பின்னாளில், சென்னையில் நாடக சபை அமைவதற்குக் காரணமாயிற்று. சம்பந்தம் 'சாகுந்தலா' என்ற நாடகத்தைத் தமிழாக்கம் செய்தார். நாடகத்தில் நடிப்பவர்கள் பற்றி அவ்வளாக சிறப்பான எண்ணங்கள் இல்லாத காலகட்டத்தில் சம்பந்தம் குழுவினர் இத்துறைக்கு மரியாதை தேடித்தந்தனர்.

சமூக நீதி புகட்டும் கதைகளே நாடகத்தின் கருவாயிற்று. மனோண்மணீயம் சுந்தரம்பிள்ளை, சி.வை. தாமோதரம்பிள்ளை, அஷ்டாவதானி பூவை கலியாணசுந்தரனார், சம்பந்த முதலியாரை ஊக்குவித்தனர்.

உ.வே.சா., பரிதிமாற்கலைஞர் ஆகியோரும் பாராட்டினர்.

சம்பந்தத்தின் முதல் நாடகம் புஷ்பவல்லி. அவரின் மிகவும் புகழ்பெற்ற நாடகம் 'மனோகரா'. இந்நாடகம் சுகுணா விலாஸ சபையால், 1895ல் விக்டோரியா நினைவரங்கத்தில் நடத்தப்பட்டது. பின்னாளில் ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனத்தால் திரைப்படமாக எடுக்கப்பட்ட மனோகரா நாடகம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

பம்மல் சம்பந்தம் 96 நாடகங்களை எழுதியிருக்கிறார்.

நாடகக்கலையில் இவர் ஆற்றிய சேவைக்காக பத்மபூஷண் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார். தற்போது தமிழகத்தில் நாடகங்கள் பெரும்பாலும் சென்னை நகரத்தில்தான் நடக்கின்றன. தமிழகத்தின் மற்ற பகுதிகளில் நாடகக்கலைக்கு வரவேற்பு குறைந்த போதிலும், சென்னையில் இதற்கென தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. பாரம்பரிய கர்னாடக இசைக்கலைக்கு வரவேற்பு இருப்பதைப் போலவே, நாடகத்திற்கும் தனி சபாக்கள் இயங்கி வருகின்றன.

மவுலி, கிரேசி மோகன் உள்ளிட்டோர் தற்கால நாடகத்துறையில் குறிப்பிடத்தக்கவர்கள். நாடகத்தைக் கற்றுத்தருவதற்கான பயிற்சிப்பட்டறைகளும் செயல்பட்டு வருகின்றன.

      Our Apps Available On

      Dinamalar

      Follow us