/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ரயில்வே ஸ்டேஷன் ரோடு துண்டிப்பு, அப்பளமானது சொகுசு கார்ரயில்வே ஸ்டேஷன் ரோடு துண்டிப்பு, அப்பளமானது சொகுசு கார்
ரயில்வே ஸ்டேஷன் ரோடு துண்டிப்பு, அப்பளமானது சொகுசு கார்
ரயில்வே ஸ்டேஷன் ரோடு துண்டிப்பு, அப்பளமானது சொகுசு கார்
ரயில்வே ஸ்டேஷன் ரோடு துண்டிப்பு, அப்பளமானது சொகுசு கார்
ADDED : ஜூலை 27, 2011 02:23 AM
தூத்துக்குடி : தூத்துக்குடி மாநகராட்சி வளைவு ரோடு குடிநீர் தொட்டி வளாகத்தில் இருந்த 53 ஆண்டு பழமை வாய்ந்த யூக்கலிப்டஸ் மரம் நேற்று அடித்த சூராவளி காற்றில் அப்படியே சாய்ந்தது. இதில் சொகு கார் ஒன்று நசுங்கியது. இதனால் ரயில்வே ஸ்டேஷன் ரோடு துண்டிக்கப்பட்டது. தூத்துக்குடி மாநகராட்சியின் பிரதான பகுதிகளில் உள்ள ஒன்று காசுக்கடை பஜார் மற்றும் வளைவு ரோடு பகுதி. மாநகராட்சி பழைய அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அலுவலங்கள், பெரும்பாலான கடைகள், அரசு அலுவலகங்கள், தியேட்டர், ரயில்வே ஸ்டேஷன் உள்ளிட்டவை இந்த பகுதியில் இருப்பதால் எப்போதும் இங்கு போக்குவரத்து மிக அதிகமாக இருக்கும். மக்கள் நடமாட்டமும் இந்த பகுதியில் எந்த நேரமும் இருந்து கொண்டே இருக்கும்.வளைவு ரோட்டில் மாநகராட்சிக்குரிய ஒன்றரை லட்சம் கொள்ளவு கொண்ட தரைமட்ட நீர்தேக்கத் தொட்டி (ஜி.எல்.ஆர்) உள்ளது. 1958ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த நீர்தேக்கத் தொட்டி வளாகத்தை சுற்றி அப்போதே யூக்கலிப்டஸ், பலா, அத்தி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் வைக்கப்பட்டன. தற்போது 53 ஆண்டுகள் ஆகியதால் அந்த மரங்கள் அனைத்தும் மெகா சைஸ் மரங்களாக வளர்ந்துள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ளவர்கள் அந்த இடத்தில் அதிகமான வாகனங்களை நிறுத்தி வைப்பர்.
நேற்று தூத்துக்குடி பகுதியில் மதியம் கொளுத்திய வெயிலுக்கு இடையே சூராவளி போல் சூறைக்காற்று மிக வேகமாக வீசியது. கடந்த சில நாட்களாக மதிய நேரத்தில் இதுபோன்ற காற்று அடித்தாலும் நேற்று மதியம் வீசிய காற்றின் வேகம் மிக அதிகமாக இருந்தது. இதனால் ரோட்டில் உள்ள புழுதிகள் ஊரே தெரியாத நிலையை உருவாக்கியது.மதியம் சுமார் இரண்டரை மணியளவில் வீசிய சூறாவளி காற்றில் வளைவு ரோட்டில் உள்ள நீர்தேக்கத் தொட்டி வளாகத்தில் இருந்த சுமார் 70 அடி நீளமுள்ள பிரமாண்டமான யூக்கலிப்டஸ் மரம் அப்படியே வேரோடு நீர்தேக்கத் தொட்டி காம்பவுண்ட் சுவரை உடைத்து கொண்டு வளைவு ரோட்டில் பயங்கர சப்தத்துடன் விழுந்தது. 23வது வார்டு திமுக கவுன்சிலர் சுரேஷ்குமார் அங்கு தனது இருசக்கர வாகனத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தார். மரம் முறிந்து விழுவதை பார்த்த அவர் உடனடியாக அங்கிருந்து வண்டியை சற்று ஓரமாக விட்டு விட்டு தப்பினார். அதற்குள் மரம் கீழே விழுந்தது.
வளைவு ரோட்டில் விடப்பட்டிந்த இன்சூரன்ஸ் கம்பெனியில் பணி செய்யும் ஒருவரின் சொகுசு கார் மீது விழுந்ததால் அந்த கார் நசுங்கியது. மரத்தின் கிளைகள் மின்சார வயரில் பட்டு வயர்கள் அறுந்து கீழே விழுந்தன.அந்த நேரத்தில் அந்த வழியாக தூத்துக்குடி புத்தக கடை ஒன்றில் வேலை செய்யும் முதியவர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அவர் வண்டியில் மின்சார வயர் பட்டவுடன் அவர் கீழே தூக்கி வீசப்பட்டு காயமடைந்தார். உடனடியாக அவர் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.உடனடியாக மின்சாரம் அந்த பகுதியில் துண்டிக்கப்பட்டது. மதிய வேளை அதுவும் சாப்பாட்டு நேரம் என்பதால் அந்த பகுதியில் ஆள் நடமாட்டம் குறைந்திருந்தது. இல்லை என்றால் அந்த பகுதியில் அதிக கூட்டம் இருந்திருக்கும். பயங்கர உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும் என்று அந்த பகுதி வியாபாரிகள் தெரிவித்தனர்.மிகப் பெரிய மரம் விழுந்ததால் அந்த பகுதியில் ரோடு துண்டிக்கப்பட்டது. ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்வோர் மெயின் ரோடு வழியாக சென்றனர்.