/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/விவசாய பயிர்களுக்கு காப்பீடுசெய்வதற்கு இன்று கடைசி நாள்விவசாய பயிர்களுக்கு காப்பீடுசெய்வதற்கு இன்று கடைசி நாள்
விவசாய பயிர்களுக்கு காப்பீடுசெய்வதற்கு இன்று கடைசி நாள்
விவசாய பயிர்களுக்கு காப்பீடுசெய்வதற்கு இன்று கடைசி நாள்
விவசாய பயிர்களுக்கு காப்பீடுசெய்வதற்கு இன்று கடைசி நாள்
திருநெல்வேலி:விவசாயிகள் தங்கள் பயிர்களுக்கான காப்பீடு செய்வதற்கு இன்று(15ம் தேதி)கடைசி நாளாகும்.இதுகுறித்து சேரன்மகாதேவி வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயசெல்வின் இன்பராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:சேரன்மகாதேவி வட்டாரத்தில் தற்போது நெல் நடவு செய்யும்பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த தருணத்தில் நடவு செய்துள்ள பயிரை வறட்சி மற்றும் வெள்ளச் சேதங்களில் இருந்து காக்க தேசிய வேளாண் காப்பீட்டு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்வதன் மூலம் உரிய இழப்பீடு பெற்றுக்கொள்ளலாம்.ஒரு ஏக்கருக்கு 153 ரூபாய் செலுத்தி காப்பீடு செய்து ரூ.13 ஆயிரம் வரை இழப்பீட்டு தொகை பெற்றுக்கொள்ளலாம். இன்று(15ம் தேதி) காப்பீட்டு பிரீமியம் தொகை செலுத்த கடைசி நாள். தங்கள் பகுதியில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் அல்லது அரசு துறை பாங்க்குகளின் மூலம் காப்பீடு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் விபரங்களுக்கு சேரன்மகாதேவி வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகலாம்.இவ்வாறு ஜெயசெல்வின் இன்பராஜ் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.