Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/பயணப்படி கிடைக்காமல் சிவகங்கை போலீசார் அவதி

பயணப்படி கிடைக்காமல் சிவகங்கை போலீசார் அவதி

பயணப்படி கிடைக்காமல் சிவகங்கை போலீசார் அவதி

பயணப்படி கிடைக்காமல் சிவகங்கை போலீசார் அவதி

ADDED : செப் 24, 2011 09:59 PM


Google News

காரைக்குடி : சிவகங்கை மாவட்டத்தில் பணிபுரியும் போலீசாருக்கு கடந்த நான்கு மாதங்களாக பயணப்படி வழங்காததால் மன உளைச்சலுடன் பணி புரிந்து வருகின்றனர்.

மொத்தம் 2,000 போலீசார் பணியாற்றி வருகின்றனர். பணி நிமித்தமாக அடிக்கடி வெளியூர் செல்லுதல், இரவு ரோந்து, தபால் 'டியூட்டி' உள்ளிட்ட பணிகளுக்காக மாதந்தோறும் போலீசாருக்கு பயணப்படி வழங்குவது வழக்கம். அவசர நேரங்களில் இப்பணம் போலீசாருக்கு பெரிதும் உதவியாக இருக்கும். இந்நிலையில், கடந்த மே மாதம் சட்டசபை தேர்தலுக்கு பின் பயணப்படி போலீசாருக்கு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இதனால், கடந்த நான்கு மாதங்களாக பயணப்படி கிடைக்காமல் போலீசார் மன உளைச்சலுடன் பணி செய்கின்றனர். மேலும், தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்டதால், இப்பணம் எப்போது 'கைக்கு' வரும் என்ற எதிர்பார்ப்பு போலீசாருக்கு உள்ளது.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us