Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/விநாயகர் சிலைகள் விஜர்சனம் எஸ்.பி., ஆலோசனை

விநாயகர் சிலைகள் விஜர்சனம் எஸ்.பி., ஆலோசனை

விநாயகர் சிலைகள் விஜர்சனம் எஸ்.பி., ஆலோசனை

விநாயகர் சிலைகள் விஜர்சனம் எஸ்.பி., ஆலோசனை

ADDED : ஆக 22, 2011 12:02 AM


Google News
சிவகங்கை : ''விநாயகர் சதுர்த்தியன்று அபிஷேகம் செய்த விநாயகர் சிலைகளை செப்., 2 மற்றும் 3ம் தேதிகளில் விஜர்சனம் செய்யவேண்டும்,'' என, விழா கமிட்டியாருக்கு, பன்னீர்செல்வம் எஸ்.பி., ஆலோசனை கூறியுள்ளார்.

செப்.,1 அன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதற்காக, இந்து அமைப்புகள் சார்பில், களிமண்ணால் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் முக்கிய வீதிகளில் வைத்து பூஜிக்கப்படும். இந்த சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று, ஊரணி, குளங்களில் கரைப்பது வழக்கம். இந்த ஆண்டிற்கான விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, திருப்புத்தூர், சிங்கம்புணரி, புதுவயல், தேவகோட்டை, சிங்கம்புணரி, கல்லல், திருப்புவனத்தில் 143 சிலைகள் பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் பாதுகாப்பு கருதி, இச்சிலைகளை செப்.,2 மற்றும் 3ம் தேதிகளில் விஜர்சனம் செய்யுமாறு, விழா கமிட்டியினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.அதன்படி, செப்.,2 அன்று காளையார்கோவில், மானாமதுரை சிலைகளை காலை 10 முதல் பகல் 12 மணிக்குள்ளும், சிவகங்கை, திருப்புத்தூர், சாக்கோட்டையில் மாலை 4 முதல் மாலை 6 மணிக்குள் கரைக்க வேண்டும். சிங்கம்புணரி, தேவகோட்டை, கல்லல், காரைக்குடி, திருப்புவனத்தில் உள்ள சிலைகளை செப்.,3 அன்று மாலை 4 முதல் 6 மணிக்குள் கரைக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது





      Our Apps Available On




      Dinamalar

      Follow us