Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/புதரில் மறைந்து கிடக்கும் கழிவுநீர் கால்வாய்

புதரில் மறைந்து கிடக்கும் கழிவுநீர் கால்வாய்

புதரில் மறைந்து கிடக்கும் கழிவுநீர் கால்வாய்

புதரில் மறைந்து கிடக்கும் கழிவுநீர் கால்வாய்

ADDED : ஆக 19, 2011 03:07 AM


Google News

பொன்னேரி:பொதுமக்களின் சுகாதாரத்திற்காக அமைக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய்களில் புதர் மண்டி, அடைப்பு ஏற்பட்டு பயன்பாடின்றி கிடப்பதுடன், கழிவுநீர் தெருக்களில் பாய்கிறது.பொன்னேரி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், கழிவுநீர் செல்வதற்காக தெருக்கள் தோறும் கால்வாய்கள் அமைக்கப்பட்டன.

அக்கால்வாய்கள் முறையான பராமரிப்பு இல்லாததால் அவற்றில் குப்பைகள் தேங்கி, அடைப்பு ஏற்படுகிறது.



அதனால் கழிவுநீர், கால்வாய்களில் செல்ல முடியாமல் தெருக்களிலும், சாலைகளிலும் பாய்கிறது. பேரூராட்சிக்குட்பட்ட 13வது வார்டு பகுதியில் உள்ள அன்னை தெரசா தெருவில், 12 ஆண்டுகளுக்கு முன் கழிவுநீர் செல்வதற்காக, 260 மீட்டர் நீளத்திற்கு கால்வாய் அமைக்கப்பட்டது.அன்னை தெரசா தெரு தொடங்கி, வாணியங்குளம் வரை கால்வாய் அமைக்கப்பட்டது.



அதன் மூலம், அப்பகுதியில் வசிக்கும், 100க்கும் அதிகமான வீடுகளின் கழிவுநீர் வெளியேற்றப்பட்டு வந்தது. கால்வாய்கள் அமைக்கப்பட்ட, ஒரு ஆண்டு காலத்தில் அவை முறையான பராமரிப்பு இல்லாமல், குடியிருப்பு பகுதிகளின் குப்பைகள் கால்வாய்களில் தேங்கி அடைப்பு ஏற்பட்டது.மேலும் கால்வாய்களில் செடி, கொடிகள் வளர்ந்து, புதர் மண்டி கால்வாய் அமைத்ததற்கான சுவடே தெரியவில்லை. ஒரு சில இடங்களில் கால்வாய்கள் தூர்ந்துபோய் உள்ளன.



கழிவுநீர் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்து சுகாதார கேடை உண்டாகி வருகிறது. இது தொடர்பாக, அப்பகுதியில் வசிப்பவர்கள் பலமுறை பேரூராட்சி அலுவலகத்திற்கு நடையாய் நடந்தும் இதுவரை பலனில்லை.பொதுமக்களின் சுகாதாரத்திற்கு கொண்டு வரப்பட்ட கழிவுநீர் கால்வாய்களில் குப்பைகளும், செடிகொடிகளும் வளர்ந்து பல லட்சம் ரூபாய் செலவிலான சுகாதார திட்டங்கள் வீணாகி வருகின்றன. பொன்னேரி பேரூராட்சியில் உள்ள பெரும்பான்மையான தெருக்களின் நிலை இதுவே.



இது குறித்து பொன்னேரி பேரூராட்சி அதிகாரி ஒருவர் கூறியபோது, ''பொன்னேரி பேரூராட்சியில் உள்ள கழிவுநீர் கால்வாய்களில் ஏற்படும் அடைப்புகளை சரி செய்து வருகிறோம். போதுமான பணியாளர்கள் இல்லாததால், உடனுக்குடன் செய்ய முடியாமல் காலதாமதம் ஏற்படுகிறது. அன்னை தெரசா தெருவில், கழிவுநீர் கால்வாய்களில் உள்ள அடைப்பை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us