Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/சென்னை - நாகர்கோவில் 625 கிலோ மீட்டர் தூரம் 8.05 மணி நேரத்தில் பறந்து சாதனை படைத்த புறா

சென்னை - நாகர்கோவில் 625 கிலோ மீட்டர் தூரம் 8.05 மணி நேரத்தில் பறந்து சாதனை படைத்த புறா

சென்னை - நாகர்கோவில் 625 கிலோ மீட்டர் தூரம் 8.05 மணி நேரத்தில் பறந்து சாதனை படைத்த புறா

சென்னை - நாகர்கோவில் 625 கிலோ மீட்டர் தூரம் 8.05 மணி நேரத்தில் பறந்து சாதனை படைத்த புறா

ADDED : ஆக 09, 2011 02:13 AM


Google News

நாகர்கோவில் : சென்னை முதல் நாகர்கோவில் வரை 625 கிலோ மீட்டர் தூரத்தை 8.05 மணி நேரத்தில் பறந்த சாதனை புறாவுக்கு பரிசு அளிக்கப்பட்டது.நாகர்கோவில் ஹோமிங் பிஜியன் பிளையர்ஸ் அசோசியேஷன் சார்பில் ஹோமர் சாம்பியன்ஸ் (நீண்ட தூரம் பறப்பது), டிப்ளர் சாம்பியன்ஸ் (அதிக நேரம் பறப்பது) என இரண்டு பிரிவுகளாக புறா பந்தயம் நடத்தப்பட்டது.

ஹோமர் சாம்பியன்ஸ், நாங்குநேரி முதல் நாகர்கோவில் வரை 50 கிலோ மீட்டர், கயத்தாறு முதல் நாகர்கோவில் வரை 105 கிலோ மீட்டர், மதுரை முதல் நாகர்கோவில் வரை 205 கிலோ மீட்டர், திருச்சி முதல் நாகர்கோவில் வரை 360 கிலோ மீட்டர், சென்னை முதல் நாகர்கோவில் வரை 625 கிலோ மீட்டர் தூரம் என பிரிவுகளாக நடத்தப்பட்டது. இதில் 45 புறாக்கள் போட்டியிட்டன. நாகர்கோவில் பள்ளிவிளை கோபிநாத் என்பவரின் புறா 625 கிலோ மீட்டர் தூரத்தை 8.05 மணி நேரத்தில் கடந்து முதல் பரிசு பெற்றது. டிப்ளர் பிரிவின் மாவட்ட அளவிலான போட்டியில் தங்கசுவாமியின் புறா 5.44 மணிநேரம் பறந்து முதல் இடம் பெற்றது. அருள்ஜோசப் என்பவர் புறா 14.58 மணி நேரமும், சிஜித் சிரில் என்பவரின் புறா 14.32 மணி நேரமும் பறந்தது. மாநில அளவிலான போட்டியில் சகாயம் என்பவர் புறா 17.39 மணி நேரமும், சிரில் என்பவர் புறா 14.40 மணி நேரமும், அசோக்சுனில் என்பவர் புறா 14.18 மணி நேரமும் பறந்தன. வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழாவிற்கு ஹோமிங் பிஜியன் பிளையர்ஸ் அசோசியேஷன் செயலாளர் பகவத்சிங் தலைமை வகித்தார். பொருளாளர் திருமலைச்செல்வன், கோபிநாத், கிளிட்டஸ்ராஜன் முன்னிலை வகித்தனர். சங்க தலைவர் ஜாண்சன் வரவேற்றார். வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்த புறா உரிமையாளர்களுக்கு சென்னை பழனி கோப்பை, பரிசு வழங்கினார். விழாவில் மதுரை ராஜமாணிக்கம், திருச்சி இன்பராஜ், சென்னை ஐவன்பிலிப்ஸ், வக்கீல் ஜார்ஜ் பால் ஆன்றோ, சிவசங்கர், ராஜா, ராஜேஷ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us