Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/வேலைப்பளுவை குறைக்க எதிர்பார்க்கும் போலீசார்

வேலைப்பளுவை குறைக்க எதிர்பார்க்கும் போலீசார்

வேலைப்பளுவை குறைக்க எதிர்பார்க்கும் போலீசார்

வேலைப்பளுவை குறைக்க எதிர்பார்க்கும் போலீசார்

ADDED : ஆக 09, 2011 01:20 AM


Google News

உத்தமபாளையம் : வேலைப்பளுவை குறைத்து பணிகளை சுழற்சி முறையில் வழங்க வேண்டும் என போலீசார் எதிர்பார்க்கின்றனர்.

தமிழகத்தில் 1 லட்சத்து 67 ஆயிரம் போலீசார் பணிபுரிகின்றனர். இதில் ஸ்டேஷன்களில் 73 சதவீதம் பேர் உள்ளனர். தொடர் பணி நடைமுறை பின்பற்றப்படுவதால் ஸ்டேஷன் போலீசாரின் நிலை பரிதாபமாக உள்ளது. ஸ்டேஷன்களில் பாதி பேர், ஓய்வின்றி பணியாற்றுகின்றனர். இதனால் வேலைப்பளு அதிகரிப்பதுடன், மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.



போலீஸ் பற்றாக்குறையான நிலையில், சட்டம் ஒழுங்கு பாதிக்கிறது. மற்ற துறைகளைப் போல போதுமான விடுப்புகளும் இல்லை. இவற்றை கருத்தில் கொண்டு மாவட்டந்தோறும் தனியாக 100 போலீசாரை கொண்ட 'மாவட்ட போலீஸ் தனி தலைமையகம்' அமைத்து, அதிலிருந்து போலீசாரை இதர அலுவல் பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும். இதனால் அனைவருக்கும் 'சுழற்சி முறை' பணி அமலாகும். இரு பிரிவினரையும் பணி இட மாற்றம் செய்து கொள்ளவும் முடியும். ஸ்டேஷன்களில் போலீசாரின் எண்ணிக்கையை அதிகரித்து சட்டம் ஒழுங்கை பாதுகாக்கலாம். எனவே மாவட்டங்களில் போலீஸ் தனி தலைமையிடத்தை ஏற்படுத்துவதை போலீசார் எதிர்பார்க்கின்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us