Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர் குருசாமி மீது "குண்டாஸ்'

மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர் குருசாமி மீது "குண்டாஸ்'

மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர் குருசாமி மீது "குண்டாஸ்'

மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர் குருசாமி மீது "குண்டாஸ்'

ADDED : ஆக 06, 2011 03:37 AM


Google News
மதுரை:மதுரையில் தி.மு.க.,வை சேர்ந்த மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர் வி.கே.குருசாமி மீது 'குண்டர்' சட்டம் பாய்ந்தது.மதுரை காமராஜர் வடக்கு தெருவை சேர்ந்த செல்வராஜ் புகார்படி, குருசாமி, அவரது மருமகன் வக்கீல் எம்.எஸ்.பாண்டி மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் நில அபகரிப்பு வழக்குப்பதிவு செய்தனர். குருசாமி பாளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பாண்டி நிபந்தனை ஜாமினில் விடப்பட்டார்.தேர்தல் முன் விரோதம் தொடர்பாக அ.தி.மு.க., 54வது வட்ட பிரதிநிதி மயில்முருகன் புகார்படி, குருசாமி மீது தெப்பக்குளம் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தனர். அ.தி.மு.க.,வை சேர்ந்த ராஜபாண்டி, தி.மு.க., மாவட்ட பிரதிநிதி சாகா ஸ்டாலின் ஆகியோர் தனித்தனியாக கொடுத்த புகார்படி, குருசாமி மீது தெப்பக்குளம் மற்றும் கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

குருசாமியை குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க போலீஸ் கமிஷனர் கண்ணப்பன் பரிந்துரைத்தார். அதை ஏற்று கலெக்டர் யு.சகாயம் உத்தரவிட்டார். தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் பொட்டு சுரேஷ், மாஜி வேளாண் விற்பனைக்குழு தலைவர் அட்டாக் பாண்டி ஆகியோரை அடுத்து குருசாமி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.கலைவாணன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது: பொதுச் சொத்தை சேதப்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ள திருவாரூர் மாவட்ட தி.மு.க., செயலர் பூண்டி கலைவாணன் மீது, குண்டர் சட்டம் பாய்ந்தது.

இன்ஸ்பெக்டர் முத்தரசு சிபாரிசின்படி, மாவட்ட எஸ்.பி., பரிந்துரையில், திருவாரூர் கலெக்டர் உத்தரவின்படி, கலைவாணன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதுகுறித்த அறிவிப்பு, பாளையங்கோட்டை சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.பொங்கலூர் பழனிச்சாமி உதவியாளர் கைது: கோவை பெருமாநல்லூரைச் சேர்ந்தவர் குணசேகரன். இவருக்கு பேரூர் செட்டிபாளையம் பகுதியில், 1.5 ஏக்கர் நிலம் உள்ளது. இந்நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து, 1 கோடி ரூபாய்க்கு விற்று மோசடி செய்ததாக, தி.மு.க., முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியின் உதவியாளர் நாகராஜ், தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் பசுபதி, மீன் கடை சிவா, நில புரோக்கர் வேணுகோபால் ஆகிய நான்கு பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.இவர்கள் நால்வரையும், இம்மாதம் 19ம் தேதி வரை, நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us