/உள்ளூர் செய்திகள்/சேலம்/சமூக மேம்பாட்டு பணியில் ஜெ.எஸ்.டபிள்யூ., ஆர்வம்சமூக மேம்பாட்டு பணியில் ஜெ.எஸ்.டபிள்யூ., ஆர்வம்
சமூக மேம்பாட்டு பணியில் ஜெ.எஸ்.டபிள்யூ., ஆர்வம்
சமூக மேம்பாட்டு பணியில் ஜெ.எஸ்.டபிள்யூ., ஆர்வம்
சமூக மேம்பாட்டு பணியில் ஜெ.எஸ்.டபிள்யூ., ஆர்வம்
சேலம்: சேலம் மாவட்டம், மேச்சேரி அருகில் உள்ள பொட்டனேரி கிராமத்தில் இயங்கி வந்த சிஸ்கால் நிறுவனம் நலிவடைந்த நிலையில், கடந்த 2004ம் ஆண்டு, ஓ.பி.ஜிண்டால் குழுமத்தின் ஒரு அங்கமான ஜெ.எஸ்.டபிள்யூ., ஸ்டீல் லிமிடெட் கையகப்படுத்தியது.
ஜெ.எஸ்.டபிள்யூ., நிறுவனம், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் அதிக முக்கியத்துவம் வழங்கி வருகிறது. பல்வேறு புதிய உத்திகள் மூலம், கழிவுகளை மீண்டும் உபயோகப்படுத்தும் வகையில், மறு சுழற்சி முறை இவ்வாலையில் செயல்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 25 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு வருகிறது. சுற்றுச்சூழலுக்கான ஐ.எஸ்.ஓ.14000 தரச்சான்றையும் பெற்றுள்ளது. கிராமங்களின் வளர்ச்சிக்காக, சங்கீதா ஜின்டால் தலைமையிலான ஜெ.எஸ்.டபிள்யூ., பவுண்டேசன் என்ற தன்னார்வ அமைப்பின்ம மூலம், சமூக வளர்ச்சி பணிகளையும் செயல்படுத்தி வருகிறது. நிறுவனத்தின் சார்பில் பிச்சைக்காரனூர், மலமானுர் துவக்கப்பள்ளிக்கு புதிய கட்டிடங்களும் கட்டித்தரப்பட்டுள்ளது. எம்.காளிப்பட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட கவுண்டனூர் பகுதி மக்களுக்கு, மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.
மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவில் திருப்பணிக்கு நிறுவனத்தின் சார்பில், 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் அருகில் வசிக்கும் பாரிநகர், மலமானுர், கவுண்டானூர், சோழியூர், காட்டுவளவு, மூர்த்திப்பட்டி, பொட்டனேரி ஆகிய பகுதி மக்களுக்காக, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய்களை அமைத்து, குடிநீர் தேவையை பூர்த்தி செய்துள்ளது. மேலும், நிறுவனத்தின் சார்பில், பொட்டனேரி சுற்றுப்பகுதிகளில் கண் பரிசோதனை முகாம், அரசு இன்ஜினியரிங் படிக்கும் மாணவ, மாணவியரில் சிறந்து விளங்கும் எட்டு பேருக்கு, ஓ.பி.ஜின்டால் நினைவு கல்வி உதவித்தொகை, ஒவ்வொரு ஆண்டும் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி, 13 லட்சம் ரூபாய் செலவில் பொட்டனேரியில் நவீன கழிப்பறை, பொட்டனேரி மகளிர் மேம்பாட்டுக்காக, இலவச தையல் பயிற்சி வகுப்பு உள்ளிட்டவற்றையும் நிறுவனம் நடத்தி வருகிறது.


