Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/மும்முனை சாலை சந்திப்பில் பஸ் நின்று செல்வதால் விபத்து அபாயம்

மும்முனை சாலை சந்திப்பில் பஸ் நின்று செல்வதால் விபத்து அபாயம்

மும்முனை சாலை சந்திப்பில் பஸ் நின்று செல்வதால் விபத்து அபாயம்

மும்முனை சாலை சந்திப்பில் பஸ் நின்று செல்வதால் விபத்து அபாயம்

ADDED : ஜூலை 21, 2011 02:17 AM


Google News

நாமக்கல் : நாமக்கல், கோட்டை சாலை மும்முனைச் சந்திப்பில் பயணிகளை ஏற்றி, இறக்க பஸ்கள் நின்று செல்வதால், விபத்து அபாயம் மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

நாமக்கல், கோட்டை சாலை ஒரு வழிச் சாலையாகும். அச்சாலை, பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்லும் சாலையாக உள்ளது. சேலம், திருச்செங்கோடு, ராசிபுரம், ஈரோடு போன்ற இடங்களுக்கு இச்சாலை வழியாக பஸ்கள் செல்லும். அதனால், மேற்குறிட்ட பகுதிகளுக்கு செல்லும் பயணிகள், கோட்டை ரோடு மும்முனை சந்திப்பில் பஸ்ஸூக்காக காத்திருப்பது வழக்கம். அப்பகுதியில் எவ்வித பஸ் நிறுத்தமும் இல்லை. தவிர, மூன்று பகுதியில் இருந்து வாகனம் வருவதால், நடந்து சாலையை கடப்பது சிரமமான காரியம். இந்நிலையில், மும்முனை சந்திப்பில் பயணிகள் பஸ்ஸூக்காக காத்திருப்பது விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. தவிர, பயணிகளை ஏற்றி, இறக்குவதற்கு பஸ்கள், கோட்டை சாலை மும்முனை சந்திப்பில் நிற்பதால், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், உழவர்சந்தை எதிரே விசாலமான சாலைக்கு பஸ் நிறுத்தும் இடத்தை மாற்ற சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us