அரூரில் அரசு கலைக்கல்லூரி துவக்கம்
அரூரில் அரசு கலைக்கல்லூரி துவக்கம்
அரூரில் அரசு கலைக்கல்லூரி துவக்கம்
ADDED : ஜூலை 19, 2011 12:16 AM
அரூர்: அரூர் அரசு கலைக்கல்லூரியை சென்னையில் இருந்து முதல்வர் ஜெயலலிதா வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் துவக்கி வைத்தார். சேலம் பெரியார் பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியல் உறுப்புக்கல்லூரியை தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை தலைமை செயலகத்தில் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் திறந்து வைத்தார். கல்லூரி திறப்பு விழா அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள கல்லூரி வளாகத்தில் நடந்தது. பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் முத்துசெழியன் பேசியதாவது: இந்தியாவில் உயர்கல்வி மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள 374 மாவட்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அந்த மாவட்டங்களில் தர்மபுரி மாவட்டமும் ஒன்றும். இந்தியாவில் உள்ள உயர்கல்வி சேர்க்கை விகிதம் 15சதவீதமாகும். தர்மபுரி மாவட்டத்தில் சராசரி விகித்திற்கு குறைவாக ஐந்து விழுக்காடாக உள்ளன. இதை மனதில் கொண்டு உயர்கல்வி வளர்ச்சியில் தர்மபுரி மாவட்டத்தை முன்னேற்ற தமிழக முதல்வர் ஜெயலலிதா அரூரில் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை திறந்து வைத்தார். இதனால், இந்த மாவட்டத்தில் அரூர் பகுதியில் உள்ள தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் வசிக்கும் இந்த பகுதியில் கல்லூரி அமையப்பெற்றது. இந்த கல்லூரிக்கு தமிழக அரசு 8 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த கல்வியாண்டில் பி.ஏ., ஆங்கிலம், பி.காம்., பி.எஸ்.சி., கணிப்பொறியில், தாவரவியல் நான்கு பாடப்பிரிவுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 200 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அல்லாத பணியாளர் தமிழக அரசின் உத்தரவுப்படி நியமிக்க ஆவண செய்யப்பட்டுள்ளது. புதிய கல்லூரி வளாகம் கட்ட இடங்கள் தேர்வு நடந்து வருகிறது. தமிழக அரசு உத்தரவு கிடைத்தவுடன் கல்லூரிக்கான வகுப்பறை, நிர்வாக கட்டிடம், கணினி மையம், விளையாட்டு மைதான வசதிகள் அடுத்த கல்வியாண்டில் ஆரம்பிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். எம்.எல்.ஏ.,க்கள் அன்பழகன் (பாலக்கோடு), டில்லிபாபு (அரூர்), ஆர்.டி.ஓ., சுப்புலட்சுமி, பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் சேது, குணசேகரன், ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள் பங்காரு, பெரியசாமி, மாது, சந்திரசேகரன், மணிமேகலை, கிருஷ்ணகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். முதல்வர் வெங்கடேஸ்வரன் நன்றி கூறினார்.