மாணவர்கள் அரிதாரம்: தலைவர்கள் "அவதாரம்'
மாணவர்கள் அரிதாரம்: தலைவர்கள் "அவதாரம்'
மாணவர்கள் அரிதாரம்: தலைவர்கள் "அவதாரம்'
ADDED : ஜூலை 14, 2011 09:36 AM

கோவை: மாறுவேடப்போட்டியில், பல்வேறு தேசத் தலைவர்களை போல வேடமணிந்து குழந்தைகள் பார்வையாளர்களை கவர்ந்தனர்.
என்.ஜி.ஜி.ஓ., காலனி அம்மன் நகரில் உள்ள, 'நாயர்ஸ் வித்யா மந்திர்' பள்ளியில் பெற்றோர் - ஆசிரியர் சிறப்புக் கூட்டம் நடந்தது. துணை முதல்வர் பிரேமலதா தலைமை வகித்தார். முதல்வர் இசக்கியேல் வரவேற்றார். தாளாளர் பாலன் நாயர் பேசுகையில்,''வாழ்க்கையில் கிடைக்கும் வாய்ப்புகளை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அன்றாடம் நமக்கு ஏற்படும் பிரச்னைகளை சிறந்த முறையில் கையாள கற்றுக் கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு தேச உணர்வையும், ஆன்மிக உணர்வையும் ஊட்டி வளர்க்க வேண்டும். அவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் நல்ல பழக்க, வழக்கங்கள் ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை '' என்றார்.
விழாவையொட்டி, குழந்தைகளுக்கான மாறுவேடப்போட்டி நடந்தது. இதில், பல்வேறு தேசத் தலைவர்களை போல வேடமணிந்து குழந்தைகள் பார்வையாளர்களை கவர்ந்தனர். விழாவில், ஏராளமான பெற்றோர் பங்கேற்றனர்.