Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/குடும்பநல திட்டத்தை முதலிடத்திற்கு கொண்டுவர கலெக்டர் வலியுறுத்தல்

குடும்பநல திட்டத்தை முதலிடத்திற்கு கொண்டுவர கலெக்டர் வலியுறுத்தல்

குடும்பநல திட்டத்தை முதலிடத்திற்கு கொண்டுவர கலெக்டர் வலியுறுத்தல்

குடும்பநல திட்டத்தை முதலிடத்திற்கு கொண்டுவர கலெக்டர் வலியுறுத்தல்

ADDED : ஜூலை 11, 2011 11:11 PM


Google News

கடலூர் : குடும்ப நலத்திட்டத்தில் கடலூர் மாவட்டத்தை முதலிடத்திற்கு கொண்டுவர செவிலியர்கள் முயற்சிக்க வேண்டும் என கலெக்டர் அமுதவல்லி பேசினார்.

உலக மக்கள் தொகை நாள் செயின்ட் ஜோசப் மேனிலைப் பள்ளி வளாக அரங்கில் நடந்தது.



கலெக்டர் அமுதவல்லி தலைமை தாங்கி பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பேசியதாவது: தமிழ்நாடு 2011ம் ஆண்டு கணக்குப்படி 7.2 கோடி ஜனத்தொகையை கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் ஒரு நிமிடத்தில் 2 குழந்தைகள் பிறக்கின்றன. நாம் குடும்ப நலத்தை பேண வேண்டும். ஒரு குடும்பத்திற்கு ஒரு ஆண் குழந்தையோ அல்லது ஒரு பெண் குழந்தையோ போதும் என்ற எண்ணத்தை உருவாக்க வேண்டும். இதற்கு கிராம செவிலியர்கள் கிராமங்களில் உள்ள பெண்களுக்கு இது குறித்து எடுத்துரைத்து ஒரு குழந்தை போதும் என்ற எண்ணம் ஏற்படும் வகையில் விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும். மேலும் கிராம செவிலியர்கள் ஒரு உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும். குடும்ப நல சிகிச்சையில் தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டம் முதலிடம் வகிக்கிறது. கடலூர் மாவட்டம் 6வது இடத்தில் இருக்கிறது. இதை முதலிடத்திற்கு கொண்டு வர செவிலியர்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் அமுதவல்லி பேசினார். இந்நிகழ்ச்சியில் மருத்துவத்துறை இணை இயக்குனர் கமலக்கண்ணன், மருத்துவமனை கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர். சதாசிவம் நன்றி கூறினார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us