/உள்ளூர் செய்திகள்/தேனி/விண்ணப்பித்து ஓராண்டாகியும் தாமதம் மகப்பேறு உதவி திட்ட உதவி தொகைவிண்ணப்பித்து ஓராண்டாகியும் தாமதம் மகப்பேறு உதவி திட்ட உதவி தொகை
விண்ணப்பித்து ஓராண்டாகியும் தாமதம் மகப்பேறு உதவி திட்ட உதவி தொகை
விண்ணப்பித்து ஓராண்டாகியும் தாமதம் மகப்பேறு உதவி திட்ட உதவி தொகை
விண்ணப்பித்து ஓராண்டாகியும் தாமதம் மகப்பேறு உதவி திட்ட உதவி தொகை
ADDED : ஜூலை 11, 2011 10:59 PM
போடி : தேனி மாவட்டத்தில் மகப்பேறு உதவி திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற விண்ணப்பம் செய்து ஓராண்டிற்கு மேலாகியும் பணம் கிடைக்காமல் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தேனி மாவட்டத்தில் போடி, சின்னமனூர், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முத்துலட்சுமிரெட்டி மகப்பேறு உதவி திட்டத்தின் கீழ் கடந்த ஆட்சியில் ஆறாயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டது. புதிதாக பொறுப்பேற்றுள்ள அ.தி.மு.க., 6 ஆயிரம் ரூபாயை 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் போடி நகராட்சி பகுதியில் மட்டும் மகப்பேறு உதவித்திட்டத்தின் கீழ் நிதி உதவி பெற 500 க்கும் மேற்பட்டோரும், மாவட்டத்தில் 2 ஆயிரத்தி 500 க்கும் மேற்பட்ட பெண்களும் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்து ஓராண்டிற்கு மேலாகியும் இன்று வரை உதவித்தொகை வழங்கவில்லை. இதனால் பெண்கள் குழந்தைகளோடு தினமும் சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு சென்று ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனர். உதவி தொகை வழங்க கோரி நகராட்சி நிர்வாகத்திடம் பல முறை கேட்டும் நடவடிக்கை இல்லை. விரைவில் உதவித்தொகை வழங்கிடும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.