கணவன்-மனைவி தகராறு: இருதரப்பு புகார்
கணவன்-மனைவி தகராறு: இருதரப்பு புகார்
கணவன்-மனைவி தகராறு: இருதரப்பு புகார்
ADDED : ஜூலை 11, 2011 10:59 PM
பெரியகுளம் : கண்டமனூரைச் சேர்ந்தவர் சிவக்குமார் (33).
இவரது மனைவி பிரியா (31). இருவருக்கும் பிரச்னை காரணமாக தேனி மாவட்ட கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. சில நாட்களுக்கு முன் இருவரும் கோர்ட்டில் ஆஜராகி வெளியே வந்தனர். கோர்ட் வளாகத்தில் சிவக்குமார், பிரியாவை அடித்தும் மிரட்டியுள்ளார். இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. மற்றொரு புகார்: பிரியா, தன் மீது செருப்பை எரிந்ததாகவும், அவரது உறவினர்கள் முத்துக்குமார் (40), தங்கத்துரை (45) அடித்ததாகவும் சிவகுமார் போலீசில் புகார் செய்துள்ளார். தென்கரை போலீசார் இருதரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.