ஏலச்சீட்டு நடத்தி ரூ.50 லட்சம் மோசடி
ஏலச்சீட்டு நடத்தி ரூ.50 லட்சம் மோசடி
ஏலச்சீட்டு நடத்தி ரூ.50 லட்சம் மோசடி
ADDED : ஆக 09, 2011 02:27 AM
சென்னை : நகை மற்றும் மாத ஏலச்சீட்டு நடத்தி, 50 லட்சம் ரூபாய்க்கு மேல் வசூல் செய்து, தலைமறைவான தம்பதியர் மீது, பொதுமக்கள் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளனர்.சென்னை வில்லிவாக்கத்தில் உள்ளது ஜே.கே.டெக்ஸ்டைல்ஸ்.
இதை ஜெயராமனும், அவரது மனைவி கோமளாவும் நிர்வகித்து வருகின்றனர். கடைக்கு அருகிலேயே இவர்களது வீடும் உள்ளது.இவர்கள் 30 மற்றும் 50 ஆயிரம், ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான மாத ஏலச்சீட்டு நடத்துவதுடன், சுற்றுவட்டார பகுதி மக்களிடம் தீபாவளி பண்டுக்காக பணமும் வசூல் செய்தனர். ஏலச்சீட்டு நடத்திய தொடக்க காலத்தில், பணத்தை சரியாக திரும்ப கொடுத்தனர்.கடந்த மாதம் மாத ஏலச்சீட்டின் கடைசி மாதம். இந்நிலையில், வசூல் செய்த பணத்துடன் தம்பதியர் தலைமறைவாகினர். இருவரும் காணாமல் போனது தெரிந்து, கடைக்கும், வீட்டுக்கும் பணம் கட்டியவர்கள் சென்று பார்த்தனர். வீட்டில் இருந்த விலையுர்ந்த பொருட்கள் காணாமல் போனதுடன், வீடும் பூட்டியிருந்தது கண்டு திகைத்தனர். இதுகுறித்து, பணம் கட்டி ஏமாந்த ஐம்பதுக்கும் மேற்பட்டோர், நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் குவிந்து, பணத்தை மீட்டுத்தரக் கோரி புகார் அளித்தனர்.


