ADDED : ஆக 23, 2011 11:43 PM
சென்னை:'கிரேட்டர் சென்னை' உருவாக்கத்தையொட்டி, மாநகராட்சி மண்டலங்கள் 15
ஆக உயருவதற்கு, மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட
இருக்கிறது.மாநகராட்சி கூட்டம், வரும் 29ம் தேதி நடக்கிறது. இதில், சென்னை
விரிவாக்கத்துக்காக, தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. 155 வார்டுகள், 200
வார்டுகளாக அதிகரிக்கப்படுகின்றன. அதேபோல், தற்போதுள்ள 10 மாநகராட்சி
மண்டலங்கள், 15 மண்டலங்களாக உயருகிறது. இதற்கு, மாநகராட்சி மன்றத்தின்
அனுமதி பெறுவதற்காக, தீர்மானம் நிறைவேற்றப்பட இருகிறது.உள்ளாட்சி தேர்தல்
அக்டோபர் மாதத்தில் நடைபெற உள்ளதால், அதற்கு முன், சென்னை மாநகராட்சி
விரிவாக்கத்துக்கான மன்ற அனுமதி பெற வேண்டும் என்பதால், விரிவாக்கம்
தொடர்பான முக்கிய முடிவுகளுக்கு, தீர்மானங்கள்
நிறைவேற்றப்படுகின்றன.மாநகராட்சி விரிவாக்கம் தொடர்பான
தீர்மானங்கள், 2010 டிசம்பர் மாதம் நடந்த கூட்டத்தில் கொண்டு வரப்பட்டன.
விரிவாக்கத்துக்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு கிளம்பியதால், தீர்மானம்
நிறைவேற்றப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.