கல்வி நிறுவனங்களில் சூரியசக்தி மின் உற்பத்தி: ரூ.81 லட்சம் மானியம்
கல்வி நிறுவனங்களில் சூரியசக்தி மின் உற்பத்தி: ரூ.81 லட்சம் மானியம்
கல்வி நிறுவனங்களில் சூரியசக்தி மின் உற்பத்தி: ரூ.81 லட்சம் மானியம்
ADDED : செப் 06, 2011 11:50 PM
மதுரை: பள்ளி, கல்லூரிகள், லாபம் ஈட்டாத நிறுவனங்கள் சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின் உற்பத்திக்கு மத்திய அரசின் புதுப்பிக்கத்தக்க எரிசக்திதுறை அமைச்சகம் 81 லட்சம் ரூபாய் மானியம் வழங்குகிறது.
இதில் 100 கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்யலாம்.
திட்ட மதிப்பு 2 கோடி ரூபாய். மத்திய அரசு 81 லட்சம் ரூபாய் மானியம் வழங்குகிறது. அரசுடமை வங்கிகளில் 75 சதவீத கடன் 5 சதவீத வட்டியில் பெறலாம். கடனை ஐந்து ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும். தினமும் 600 யூனிட், ஓராண்டுக்கு 15 லட்சம் ரூபாய் மின் கட்டணத்தை சேமிக்க முடியும். எட்டு ஆண்டுகளில் முதலீடு திரும்ப கிடைக்கும். திட்ட ஆயுள் 25 ஆண்டுகள். இதில் 17 ஆண்டுகளில் 15 லட்சம் ரூபாய் உபரி வருவாய் கிடைக்கும். சூரிய ஒளி, காற்றாலை கலப்பு மின் திட்டத்தின் கீழ் ஒரு கிலோ வாட் மின் உற்பத்திக்கு 1.50 லட்சம் ரூபாய் வீதம் மத்திய அரசு மானியம் வழங்குகிறது. 100 கிலோ வாட்டுக்கு 1.50 கோடி ரூபாய் கிடைக்கும். திட்ட மதிப்பீடு 1.8 கோடி. தினமும் 60 சதவீதம் காற்றாலை, 40 சதவீதம் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்க முடியும். இதனால், தினமும் தடையற்ற மின்சாரம் கிடைக்கும் என துணை பொதுமேலாளர் செய்யது அகமது தெரிவித்தார். அதிக மானியம், குறைந்த நிலப்பரப்பில் அதிக மின் உற்பத்தி செய்ய முடியும். தமிழ்நாடு எரிசக்தி வளர்ச்சி முகமை (டெடா) மதுரை மண்டல அலுவலகத்தை 0452-253 5067 ல் தொடர்பு கொள்ளலாம்.