Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/2020க்குள் உற்பத்தி அதிகரிப்பு விவசாயத்துறை "ஆக்ஷன் பிளான்'

2020க்குள் உற்பத்தி அதிகரிப்பு விவசாயத்துறை "ஆக்ஷன் பிளான்'

2020க்குள் உற்பத்தி அதிகரிப்பு விவசாயத்துறை "ஆக்ஷன் பிளான்'

2020க்குள் உற்பத்தி அதிகரிப்பு விவசாயத்துறை "ஆக்ஷன் பிளான்'

ADDED : ஜூலை 23, 2011 10:31 PM


Google News

கம்பம் : வரும் 2020-க்குள் மொத்த உணவு உற்பத்தியில் 50 சதவீதம் அதிகரிக்க ஆக்ஷன் பிளான் தயாரிக்க அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

வரும் 2020-ல் தமிழகத்தில் உணவு பற்றாக்குறை ஏற்படும் என்று பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதையடுத்து உணவு உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன்படி ஒவ்வொரு ஆண்டும் உணவு உற்பத்தி அதிகரிக்க நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது. முந்தைய ஆண்டை விட 50 சதவீத உணவு உற்பத்தி அதிகரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. திட்டம்: இதற்கென 'ஆக்ஷன் பிளான்' ஒன்றை தயாரிக்க மாவட்ட இணை இயக்குனருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. நவீன தொழில்நுட்பம், அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், விவசாயிகளுக்கு மார்க்கெட்டிங்கில் உதவ கவனம் செலுத்த கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. உணவு உற்பத்தியில் நெல், கரும்பு, பருத்தி, வாழை, பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் அடங்கும். அடர் நடவு முறையில் மா, வாழை, கொட்டை முந்திரி ஆகியவற்றின் சாகுபடி பரப்பளவை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us