Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/தூத்துக்குடி புதிய அனல்மின் நிலையத்தில் பிரமாண்ட பாய்லர் பொருத்தும் பணி துவங்கியது

தூத்துக்குடி புதிய அனல்மின் நிலையத்தில் பிரமாண்ட பாய்லர் பொருத்தும் பணி துவங்கியது

தூத்துக்குடி புதிய அனல்மின் நிலையத்தில் பிரமாண்ட பாய்லர் பொருத்தும் பணி துவங்கியது

தூத்துக்குடி புதிய அனல்மின் நிலையத்தில் பிரமாண்ட பாய்லர் பொருத்தும் பணி துவங்கியது

ADDED : ஜூலை 15, 2011 03:26 AM


Google News
தூத்துக்குடி:தூத்துக்குடியில் 4,500 கோடியில் புதியதாக உருவாகி வரும் அனல் மின்நிலையத்தில் பிரமாண்ட பாய்லர் பொருத்தும் பணி துவங்கியுள்ளது. அடுத்தமாதம் அதனை குளிர்விக்க கூடிய அளவிற்கு மெகா சைஸ் டிரம் அமைக்கப்படுகிறது. வெளி மாநிலங்களில் இருந்து இதற்காக நவீன சாதனங்கள் 60 சதவீதம் வந்து குவிந்துள்ளது.மின்தட்டுப்பாடு இல்லாத மாநிலமாக தமிழகத்தை ஆக்க வேண்டும் என்பதில் முதல்வர் ஜெ., தீவிரம் காட்டி வருகிறார். இதற்காக துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புதிய மின் திட்டங்கள் நடக்கும் இடங்களில் விரைவாக பணிகளை முடிக்கும் வகையில் அவர்களுக்கு மின்வாரிய உயர் அதிகாரிகள் மூலம் சிறப்பு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக அடிக்கடி அவர்களுடன் மின்வாரிய தலைவர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். நாளை சென்னையில் இது சம்பந்தமாக முக்கிய ஆய்வு கூட்டம் நடக்கிறது.

இதனால் புதிய மின் திட்டங்கள் நடக்கும் இடங்களில் பணிகள் கூடுதல் சுறுசுறுப்பை எட்டி வருகிறது.

தூத்துக்குடியில் தற்போது செயல்பட்டு வரும் 1050 மெகாவாட் அனல்மின் நிலையம் அருகே புதியதாக 4 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவில் 2 இண்டு 500 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகள் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு துவங்கியது. தூத்துக்குடியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த தொடர் மழை மற்றும் நிலம் கிடைப்பதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக மின் நிலைய பணிகளில் சற்று தொய்வு ஏற்பட்டது. இதுபோன்ற காரணங்களால் சுமார் 6 மாதத்திற்கு மேல் பணிகள் நின்று போகும் நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது போன்ற பிரச்னைகள் முழுமையாக தீர்ந்தவுடன் பணிகள் வேகமாக நடக்க துவங்கியது. புதிய அனல் மின் நிலையத்திற்கான பணிகளை குறித்த காலத்தில் முடிக்க வேண்டும் என்பதற்காக தடைபட்ட காலத்திற்குரிய பணிகளையும் ஈடு செய்யும் வகையில் பணிகள் கூடுதல் சுறுசுறுப்பை அடைய அதிகாரிகள் ஏற்பாடு செய்து பணிகள் நடந்து வந்தன. தற்போது அதிமுக அரசு பதவி ஏற்றவுடன் மின்சாரத்துறையில் கூடுதல் கவனம் செலுத்த துவங்கியிருப்பதால் பணிகள் இன்னும் அதிக வேகமாக தூத்துக்குடியில் நடந்து வருவதாக மின்வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. நெய்வேலி லிக்னெட் கார்ப்ரேஷன் 89 சதவீதமும், தமிழ்நாடு மின்சார வாரியம் 11 சதவீதமும் இணைந்து தூத்துக்குடியில் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி நிலையத்தை இரண்டு யூனிட்டாக அமைக்கிறது. மொத்தம் ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பில் இந்த மின் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. முழுக்க, முழுக்க நவீன தொழில் நுட்பத்துடன் புதிய அனல்மின் நிலையம் அமைவதால் மின் உற்பத்தி செய்யும் போது வெளியாகும் புகை வெளியே வராத அளவிற்கு கட்டுப்படுத்தப்படுகிறது. அந்த அளவிற்கு மிக நவீன தொழில் நுட்பத்துடன் இந்த அனல்மின் நிலையம் அமைக்கப்பட்டு வருவதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அனல் மின்நிலையத்தில் முக்கிய உபகரணம் என்றால் பாய்லர் தான். இங்கு இரண்டு பிரமாண்ட பாய்லர்கள் அமைக்கப்படுகிறது. இந்த பாய்லர்கள் இரண்டும் திருச்சியில் இருந்து கொண்டுவரப்பட்டு பொருத்தும் பணி தற்போது மேற்கொள்ள துவங்கியுள்ளது. ஒவ்வொரு பாயிலரும் 500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யக் கூடிய பாய்லராகும். இந்த பாயிலரை குளிர்விக்க 235 டன் டிரம் தொங்கவிடப்படுகிறது. இந்த டிரம்களும் தற்போது தூத்துக்குடிக்கு வந்துவிட்டது. இதனை பொறுத்துவதற்கான பணிகளும் அடுத்த மாதம் துவக்கப்படுகிறது. நிலக்கரியை எரிக்கும் போது அதன் சாம்பலை பிரிக்கும் நவீன எலக்ட்ரோ ஸ்டேட்டிங் பிரசிபிசேட்டர் என்னும் நவீன கருவி அமைக்கப்படுகிறது. இந்த கருவி அமைக்கப்படுவதால் பழைய அனல்மின் நிலையத்தில் இருந்து வெளியாகும் புகை வெளியில் அப்படியே தெரியும். ஆனால் தற்போது அதுபோன்று புகை வெளியே வராது. 99.95 சதவீதம் அதனை கட்டுப்படுத்தி வைக்கும் அளவிற்கு நவீன தொழில் நுட்பம் இதில் உருவாக்கப்பட்டிருப்பதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு சிறிதளவு கூட பாதிப்பு வராது. இதற்கான உபகரணங்கள் முழுவதும் ராணிப்பேட்டையில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளது. டர்பைன் உத்திராஞ்சல் மாநிலம் ஹரித்துவாரில் இருந்தும், மெகாசைஸ் பம்புகள் ஐதராபாத்தில் இருந்தும் வரவழைக்கப்பட்டுள்ளது. மின் உற்பத்தி செய்யும் போது பாய்லரை குளிர்விக்க ஒரு மணி நேரத்திற்கு 1600 டன் தண்ணீர் தேவை. இதனால் மிகப் பெரிய அளவிலான பம்புகள் மூலம் தண்ணீர் செலுத்த வேண்டியுள்ளது. இந்த பம்புகள் தான் ஐதராபாத்தில் இருந்து வந்துள்ளது. தற்போதுள்ள நிலையில் மொத்தம் 60 சதவீத உபகரணங்கள் வந்துவிட்டன.17 மீட்டர் உயரத்திற்கு டர்பைன் நிறுவ சிவில் வேலை பணிகள் அடுத்த மாதம் (ஆகஸ்ட்) துவக்கப்படுகிறது. இது ஒரு மிகப் பெரிய பணியாகும் மாஸ் கான்கீரிட் இதற்காக போடப்படுகிறது. இந்த அனல்மின் நிலையத்திற்கு தேவையான உபகரணங்கள் மட்டும் சுமார் 2 ஆயிரத்து 500 கோடி ரூபாயிற்கு வாங்கி பொறுத்தப்படுகிறது. கன்ஸ்டிரக்ஷன் பணிகள் ஆயிரம் கோடி ரூபாயிற்கும் நடக்க உள்ளது. தூத்துக்குடியில் அமைக்கப்பட்டு வரும் புதிய ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி நிலையத்தின் முதல் உற்பத்தி 2012 டிசம்பர் மாதம் துவங்கும்.

குறித்த காலத்தில் பணிகளை முடித்து மின் உற்பத்தியை துவக்குவதற்கு வேண்டிய நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தூத்துக்குடி பழைய அனல் மின்நிலையம் அருகே புதிய அனல் மின் நிலையும் அமைந்து கொண்டிருப்பதாலும், அந்த பணிகள் மிக வேகமாக தற்போது நடப்பதால் அந்த பகுதியில் ஆட்கள் நடமாட்டம், வேலைகளுக்கு நவீன இயந்திரங்கள் போன்றவற்றால் அந்த பகுதியே பரபரப்பாக காணப்படுகிறது. தற்போது அனல் மின்நிலையத்தின் பிரதான பணியான பாய்லர் பொறுத்தப்படுவதால் அதனை பார்ப்பதற்கே பிரமிப்பாக இருக்கிறது. இந்த பணியினை அந்த பகுதியில் உள்ளவர்கள் வியப்புடன் பார்த்து சென்று கொண்டிருக்கின்றனர். இந்த பணிகளின் மேஜர் காண்டிராக்ட் அரசு பொதுத்துறை நிறுவனமான பாரத் ஹெவி எலக்டிரானிக் நிறுவனம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us