/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/குற்றாலத்தில் விடிய விடிய மழைஅருவிகளில் வெள்ளப் பெருக்குகுற்றாலத்தில் விடிய விடிய மழைஅருவிகளில் வெள்ளப் பெருக்கு
குற்றாலத்தில் விடிய விடிய மழைஅருவிகளில் வெள்ளப் பெருக்கு
குற்றாலத்தில் விடிய விடிய மழைஅருவிகளில் வெள்ளப் பெருக்கு
குற்றாலத்தில் விடிய விடிய மழைஅருவிகளில் வெள்ளப் பெருக்கு
ADDED : ஜூலை 15, 2011 02:11 AM
குற்றாலம்:குற்றாலத்தில் ஆர்ப்பரித்து ஆர்ச் தாண்டி தண்ணீர் விழுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க காலையில் தடையும், மாலையில் அனுமதியும் வழங்கப்பட்டது.
குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் நான்கு மாதங்கள் வரை சீசன் நீடிக்கும்.
குற்றால சீசனுக்கு பல்வேறு பகுதியில் உள்ள லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தந்து அருவியில் ஆனந்தமாக குளித்து மகிழ்வர்.கடந்த மாதம் இறுதியில் கடும் வெயில் காரணமாக அனைத்து அருவிகளிலும் நீர் வரத்து குறைந்த போதும் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறையவில்லை. தற்போது கேரளாவில் தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைந்துள்ளதால் கடந்த 5 தினங்களாக குற்றாலத்தில் சாரலுடன் கூடிய மழை பெய்துவருகிறது.
இதனால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் சுமாராக விழுந்த போதும் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்று குளித்து வந்தனர்.
கேரளா மற்றும் செங்கோட்டை சுற்று வட்டாரத்திலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் நேற்று முன்தினம் இரவு விடிய விடிய மழை பெய்தது. இதனால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. பாதுகாப்பு வளையத்தையும் தாண்டி ஆர்ப்பரித்து விழும் தண்ணீரில் கற்கள், மரக்கிளைகள் விழுந்தது. ஆபத்து ஏதும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று காலை 10.30மணி முதல் சுற்றுலா பயணிகள் மெயின் அருவியில் குளிக்கதடை விதிக்கப்பட்டது. ஐந்தருவியில் நேற்று அதிகாலையிலேயே சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.ஐந்தருவியில் மதியம் 1.30மணிக்கும், மெயின் அருவியில் மதியம் 2மணிக்கும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. பழைய குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் வரிசையாக நின்று குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
குற்றாலம் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்துவரும் மழையின் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் விவசாய பணியை மேற்கொண்டுவருகின்றனர்.