/உள்ளூர் செய்திகள்/கடலூர்/கிராவல் கடத்திய டிராக்டர்கள் பறிமுதல்கிராவல் கடத்திய டிராக்டர்கள் பறிமுதல்
கிராவல் கடத்திய டிராக்டர்கள் பறிமுதல்
கிராவல் கடத்திய டிராக்டர்கள் பறிமுதல்
கிராவல் கடத்திய டிராக்டர்கள் பறிமுதல்
ADDED : ஆக 03, 2011 10:04 PM
திட்டக்குடி : ராமநத்தம் அருகே நள்ளிரவில் கிராவல் கடத்திய ஐந்து டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திட்டக்குடி தாசில்தார் சையத்ஜாபர், மண்டல துணை தாசில்தார்கள் கிருஷ்ணமூர்த்தி, பாலு மற்றும் ஊழியர்கள் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். ராமநத்தம் அடுத்த புலிகரம்பலூர் மெயின்ரோட்டில் கிராவல் ஏற்றி வந்த ஐந்து டிராக்டர்களை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அனுமதியின்றி கிராவல் கடத்தி வருவது தெரிய வந்ததால் ஐந்து டிராக்டர்களையும் பறிமுதல் செய்தனர். மேலும், டிராக்டர்களின் உரிமையாளர்களாக தச்சூரை சேர்ந்த பூமாலை, முத்துசாமி, ஆதிமூலம், கணேசன், பெருமாள் ஆகியோர் மீது மேல் நடவடிக்கை எடுக்க விருத்தாசலம் ஆர்.டி.ஓ.,விற்கு பரிந்துரை செய்தனர்.