Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/கந்து வட்டி கும்பலை தடுக்க தனிப்படை அமைப்பு கடும் நடவடிக்கை எடுக்க போலீஸ் முடிவு

கந்து வட்டி கும்பலை தடுக்க தனிப்படை அமைப்பு கடும் நடவடிக்கை எடுக்க போலீஸ் முடிவு

கந்து வட்டி கும்பலை தடுக்க தனிப்படை அமைப்பு கடும் நடவடிக்கை எடுக்க போலீஸ் முடிவு

கந்து வட்டி கும்பலை தடுக்க தனிப்படை அமைப்பு கடும் நடவடிக்கை எடுக்க போலீஸ் முடிவு

ADDED : ஆக 21, 2011 02:26 AM


Google News
சென்னை : ''சென்னையில், கந்து வட்டிக் கும்பலைத் தடுக்க, துணை கமிஷனர்கள் தலைமையில், தனிப்படை அமைத்து, கண்காணிக்கப்பட்டு வருகிறது. கந்து வட்டி வசூலிப்போர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என, சென்னை மாநகர போலீஸ் கூடுதல் கமிஷனர் தாமரைக்கண்ணன் கூறினார்.சென்னையில், கடந்த ஒரு மாதத்தில், போலீசார் எடுத்த நடவடிக்கைகள் குறித்து, கூடுதல் கமிஷனர் தாமரைக்கண்ணன் கூறியதாவது:சென்னைக்கு, கூடுதலாக 2,800 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால், நடவடிக்கைகள் மேலும் அதிகரிக்கும். புளியந்தோப்பு பெண் கொலை, அண்ணா நகர் இரட்டைக் கொலையில் மட்டும் தான், கொலையாளிகளை கைது செய்ய வேண்டியுள்ளது.'பஸ் டே' நடத்த அனுமதி இல்லை. தடையை மீறி செயல்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கல்லூரிகளில்,'ராகிங்' செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து, கல்லூரிகளுக்கே சென்று எச்சரித்துள்ளோம். கோயம்பேடு உள்ளிட்ட மார்க்கெட்டுகளில், வியாபாரிகளிடம் கந்து வட்டி நடத்தும் கும்பல் குறித்து, புகார்கள் வந்துள்ளன. அந்தந்த போலீஸ் மாவட்டங்களில், துணை கமிஷனர்கள் தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கந்து வட்டிக் கும்பல் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, கூடுதல் கமிஷனர் தாமரைக்கண்ணன் கூறினார்.என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன?

* ஒரு மாதத்தில், 110 வழக்குகளில் தொடர்புடைய, 119 பேர் கைது. அவர்களிடமிருந்து, ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள, 579 சவரன் நகைகள், 1.5 கிலோ வெள்ளிப் பொருட்கள், 5.9 லட்சம் ரொக்கப் பணம், 23 மொபைல்போன்கள், 10 'லேப்-டாப்', இரு கார்கள், ஒன்பது டூவீலர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.* அண்ணா நகர் பியூட்டி பார்லர் கொள்ளை, நுங்கம்பாக்கம், கீழ்ப்பாக்கத்தில் தொடர் பிரேஸ்லெட் பறிப்பு, நுங்கம்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் திருடு போன, 85 சவரன் தங்க நகைகள், 24 மணி நேரத்தில் மீட்கப்பட்டன.* பெரவள்ளூரில், இணையதளம் மூலம், திருமண ஆசை காட்டி, நான்கு ஆண்களிடம், ஐந்து லட்ச ரூபாய் மோசடி செய்த இளம்பெண் கைது செய்யப்பட்டார்.* ஒரு மாதத்தில், 89 பேர் குண்டர் சட்டத்தில், சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நில அபகரிப்பு வழக்கில், கைது செய்யப்பட்ட 22 பேரில், முக்கிய குற்றவாளிகளான, முன்னாள் எம்.எல்.ஏ., ரங்கநாதன், கவுரி சங்கர், ரவிச்சந்திரன் மற்றும் மக்பூல்ஜான் நான்கு பேரும், குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us