ADDED : ஆக 20, 2011 07:02 PM
மதுரை: மதுரை காந்தி மியூசியத்தில் ராமச்சந்திரன் - இகேடா விருதுக் குழு சார்பில், கல்லூரி மாணவர்களுக்கான அமைதிவழி கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.
தியாகி வைத்தியலிங்கம் பயன்படுத்திய ராட்டையை, மியூசிய செயலாளர் ரெங்கசாமியிடம், திருவனந்தபுரம் மக்கள் சேவை அறக்கட்டளை நிர்வாகி மைதிலி வழங்கினார். சென்னை காந்திய கல்வி மைய செயலாளர் பாண்டியன் துவக்கி வைத்தார். டில்லி காந்திய கல்வி நிறுவனத் தலைவர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். அமைதியை வலியுறுத்தும் வகையில், கல்லூரி மாணவர்கள் பல்வேறு தலைப்புகளின் கீழ் பேசினர். பேராசிரியர்கள் வில்லியம் பாஸ்கரன், சீனிவாசன் நிகழ்ச்சியை நடத்தினர்.