/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/அதிகாரிகள் தன்னிச்சையாக வார்டு மறுசீரமைப்பு? விழுப்புரம் நகர் மன்றத்தில் கவுன்சிலர்கள் எதிர்ப்புஅதிகாரிகள் தன்னிச்சையாக வார்டு மறுசீரமைப்பு? விழுப்புரம் நகர் மன்றத்தில் கவுன்சிலர்கள் எதிர்ப்பு
அதிகாரிகள் தன்னிச்சையாக வார்டு மறுசீரமைப்பு? விழுப்புரம் நகர் மன்றத்தில் கவுன்சிலர்கள் எதிர்ப்பு
அதிகாரிகள் தன்னிச்சையாக வார்டு மறுசீரமைப்பு? விழுப்புரம் நகர் மன்றத்தில் கவுன்சிலர்கள் எதிர்ப்பு
அதிகாரிகள் தன்னிச்சையாக வார்டு மறுசீரமைப்பு? விழுப்புரம் நகர் மன்றத்தில் கவுன்சிலர்கள் எதிர்ப்பு
ADDED : ஜூலை 13, 2011 12:59 AM
விழுப்புரம் : விழுப்புரம் நகராட்சி வார்டுகள் மறு சீரமைப்பு பணிகள்
சேர்மன் மற்றும் கவுன்சிலர்களுக்கு தெரியாமல் நடந்துள்ளதைக் கண்டித்து
கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
விழுப்புரம் நகராட்சியின் சாதாரணக் கூட்டம்
நேற்று காலை சேர்மன் ஜனகராஜ் தலைமையில் நடந்தது. நகராட்சி ஆணையர்
சிவக்குமார், பொறியாளர் பார்த்திபன் முன்னிலை வகித்தனர். விழுப்புரம்
நகராட்சியுடன் காகுப்பம், எருமணந்தாங்கல், பாணாம்பட்டு, சாலாமேடு மற்றும்
வழுதரெட்டி ஊராட்சிகளை இணைத்து எல்லை விரிவாக்கம் செய்தல், விழுப்புரம்
நகராட்சியில் தற்போதுள்ள 36 வார்டுகளை 33 வார்டுகளாக மாற்றம் செய்தல்
உள்ளிட்ட தீர்மானங்கள் முன் மொழியப்பட்டது. இது தொடர்பாக பேசிய அ.தி.மு.க.,
கவுன்சிலர்கள் மல்லிகா, பாபு, கணேஷ்சக்திவேல், அலாவூதீன் மற்றும் சேகர்
நகராட்சி வார்டுகள் மறுசீரமைப்பு குறித்து நகராட்சி தலைவர் மற்றும்
கவுன்சிலர்களுக்கு தெரிவிக்காமல் அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்பட்டதற்கு
கண்டனம் தெரிவித்தனர். மேலும், மறு சீரமைப்பு பணிகள் முறையாக
நடைமுறைப்படுத்தவில்லை என்றும் தெரிவித்தனர். இதேபோல் தி.மு.க.,
கவுன்சிலர்கள் பார்த்திபன், ரகுபதி, பஞ்சநாதன், செல்வராஜ் ஆகியோரும்
நகராட்சி அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படுவதைத் தவிர்த்து,
கவுன்சிலர்களின் ஆலோசனைப்படி மறு சீரமைப்பு மேற்கொள்ள வேண்டும் என
கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக சேர்மன் ஜனகராஜ் பேசுகையில்,
அதிகாரிகள் தன்னிச்சையாக வார்டு மறு சீரமைப்பு பணியை மேற்கொண்டுள்ளது
வருந்தத்தக்கது. நகர மன்ற கவுன்சிலர்களின் ஆலோசனைப்படியே அதிகாரிகள் மறு
சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். நகர் மன்றக் கூட்டத்தில் நாம்
எடுக்கப்படும் முடிவை கோர்ட்டிலும் ஏற்றுக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது.
மக்கள் பிரதிநிதிகளின் ஆலோசனைப் படி நகராட்சி வார்டுகள் மறு சீரமைப்புக்கான
பணியை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். அதன் பின்
எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படாமல் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.