Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ஆடிப்பட்டம் தேடி விதைப்போம்

ஆடிப்பட்டம் தேடி விதைப்போம்

ஆடிப்பட்டம் தேடி விதைப்போம்

ஆடிப்பட்டம் தேடி விதைப்போம்

ADDED : ஆக 03, 2011 12:57 AM


Google News

மதுரை : மதுரை கிழக்கு யூனியன் தோட்டக்கலை துறை மூலம், ஆடிப்பட்டத்தில் காய்கறி சாகுபடி ஊக்குவிக்கப்படுகிறது.

ஆடிப் பெருக்கையொட்டி காய்கறி விதைகளை விதைப்பது, தமிழக விவசாயிகளின் பாரம்பரிய வழக்கம். இந்த ஆண்டும் காய்கறி விநியோகம் துவங்கியுள்ளது. நகர்ப்புற காய்கறி அபிவிருத்தி திட்டத்தில் பாக்கெட்டுகளில் தரமான விதைகளை விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் தேவைக்கு ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தில் 50 சதவீத மானியத்துடன் விற்கப்படுகிறது. அண்ணாநகர், சொக்கிக்குளம் உழவர் சந்தைக்கு அதிகளவு காய்கறிகளை கொண்டு வரும் நாயக்கன்பட்டி கிராமத்தில் விதைவிநியோக முகாம் நடக்க உள்ளது. தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை, கீரை வகைகள், பாகல், புடலை, பூசனி, அவரை போன்ற தேவைக்கு கிழக்கு யூனியன் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். பழமரக் கன்றுகள், அழகுச் செடிகள் தேவைக்கு பதிவு செய்தால் ஒரு வார காலத்தில் தரமான கன்றுகள் தர ஏற்பாடு செய்து தரப்படும். மானியம் தொடர்பாக ஆலோசனை பெற, 98652-80167ல் தொடர்பு கொள்ளலாம், என உதவி இயக்குனர் காமராஜ் தெரிவித்துள்ளார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us