/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ஸ்ரீவி., பகுதியில் ஆடிப்பட்டம் மழை தாமதம் : நடவு பணியில் விவசாயிகள் ஆர்வம்ஸ்ரீவி., பகுதியில் ஆடிப்பட்டம் மழை தாமதம் : நடவு பணியில் விவசாயிகள் ஆர்வம்
ஸ்ரீவி., பகுதியில் ஆடிப்பட்டம் மழை தாமதம் : நடவு பணியில் விவசாயிகள் ஆர்வம்
ஸ்ரீவி., பகுதியில் ஆடிப்பட்டம் மழை தாமதம் : நடவு பணியில் விவசாயிகள் ஆர்வம்
ஸ்ரீவி., பகுதியில் ஆடிப்பட்டம் மழை தாமதம் : நடவு பணியில் விவசாயிகள் ஆர்வம்
ADDED : ஆக 18, 2011 12:24 AM
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் கடந்த இரு நாட்களாக மழை பெய்து வருகிறது.
தாமதமாக துவங்கிய ஆடிப்பட்டத்தில் நடவு பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் கடந்த ஆறு மாதங்களாக மழை சரி வர பெய்யாததால் கண்மாய்களில் தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீரின்றி கிணறுகளிலும் போதிய தண்ணீர் இல்லாமல் பற்றாக்குறையாக இருந்தது. இந்நிலையில் ஆடிப்பெருக்கு நாளில் விவசாயிகள் விதை நடவு செய்வது வழக்கம். ஆடிப்பட்டத்தில் மழை பெய்யாமல் பொய்த்தது.
விவசாயிகள் விதை நடவு செய்யாமல் இருந்தனர். இந்நிலையில் கடந்த இரு நாட்களாக ஸ்ரீவில்லிபுத்தூர், நாச்சியார்பட்டி, அப்பையநாயக்கன்பட்டி,வங்காருபட்டி, பாட்டக்குளம், விழுப்பனூர், பிள்ளையார்நத்தம் உட்பட சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இப்பகுதி விவசாயிகள் மானாவாரியில் மிளகாய், தக்காளி, வெங்காயம் போன்ற விதைகளை நடவு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பருவ மழை மானாவாரிப்பயிர்கள் காக்கும் விதமாக தொடர வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்
இது குறித்து விவசாயி ராம்ராஜ் கூறியதாவது,'' தற்போது இரு நாட்களாக மழை பெய்வதால் மிளகாய் விதை நடவு செய்துள்ளேன். தொடர்ந்து மழை பெய்து கிணறுகளில் தண்ணீர் பெருகினால் இந்தாண்டு விவசாயம் நல்ல படியாக இருக்கும்,'' என்றார்.


