/உள்ளூர் செய்திகள்/சேலம்/அரசுஷாக்! பள்ளி சுவரை தொட்டவர்களுக்கு... வகுப்பினுள் மழைநீர் தேங்கியதால் விபரீதம்அரசுஷாக்! பள்ளி சுவரை தொட்டவர்களுக்கு... வகுப்பினுள் மழைநீர் தேங்கியதால் விபரீதம்
அரசுஷாக்! பள்ளி சுவரை தொட்டவர்களுக்கு... வகுப்பினுள் மழைநீர் தேங்கியதால் விபரீதம்
அரசுஷாக்! பள்ளி சுவரை தொட்டவர்களுக்கு... வகுப்பினுள் மழைநீர் தேங்கியதால் விபரீதம்
அரசுஷாக்! பள்ளி சுவரை தொட்டவர்களுக்கு... வகுப்பினுள் மழைநீர் தேங்கியதால் விபரீதம்
ADDED : ஆக 17, 2011 03:10 AM
ஆத்தூர் : ஆத்தூர் அருகே, அரசு நடுநிலைப்பள்ளி வகுப்பறை கட்டிடத்தில் மழை நீர் கசிந்திருந்தது. வகுப்பறைக்கு சென்ற மாணவ, மாணவியர் ஈரமான சுவரை தொட்ட போது, 'ஷாக்' அடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தலைமை ஆசிரியர், மின் இணைப்பை துண்டித்ததால், 50 மாணவர்கள் உயிர் தப்பினர். சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே பைத்தூர் பஞ்சாயத்தில் தவளப்பட்டி மலை கிராமம் உள்ளது. அங்குள்ள அரசு நடுநிலைப்பள்ளியில், தவளப்பட்டி, வானபுரம், கல்லுக்கட்டு, முருவம் உள்ளிட்ட மலை கிராமங்களை சேர்ந்த, 138 மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.
கடந்த 2003-04ல் கட்டப்பட்ட வகுப்பறை கட்டிடத்தின் மேல்தளத்தில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், சதுர ஓடுகள் பதிக்கவும், ஆஸ்பெஸ்டாஸ் வகுப்பறை கட்டிடத்தில், ஓடுகள் பதிக்கும் பணிகளுக்கும், கடந்த 2010-11ம் ஆண்டு யூனியன் நிர்வாகம் மூலம், 'டெண்டர்' விடப்பட்டது. பைத்தூரை சேர்ந்த தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர் ரவியின் சகோதரர் சக்திவேல் பெயரில், 'டெண்டர்' எடுத்து, கடம்பூரை சேர்ந்த செல்வம் என்பவருக்கு, சப் டெண்டர் விட்டுள்ளனர்.
தொடர்ந்து, 1965ல் கட்டப்பட்ட ஆஸ்பெஸ்டாஸ் வகுப்பறை கட்டிடத்தின் அட்டைகள் முழுவதையும் அகற்றி, கான்கிரீட் கட்டிடத்தின் மேல்தளத்தில் ஓடுகள் பதிக்க, கான்கிரீட் முழுவதும் பெயர்த்தனர். பல மாதங்களாக பணிகள் மேற்கொள்ளாமல் கிடப்பில் போட்டுள்ளதால், மாணவ, மாணவியர் மூன்று வகுப்பறை கட்டிடத்தில் கடும் இடநெருக்கடியில் அமர்ந்து படிக்கின்றனர்.
நேற்று முன்தினம் இரவு 11 மணி முதல் அதிகாலை 3 மணி வரை மழை கொட்டி தீர்த்தது. அதனால், கான்கிரீட் பெயர்க்கப்பட்ட கட்டிட மேல்தளத்தில் குளம் போல் மழை நீர் தேங்கியது. மேலும், வகுப்பறையினுள் சுவிட்ச் பாக்ஸ்களின் வழியாக மழை நீர் கசிந்தபடி இருந்தது. வகுப்பறைகளிலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
இந்நிலையில், நேற்று காலை 8.30 மணியளவில் பள்ளிக்கு வந்த, 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் வகுப்பறை சுவரை தொட்டபோது, மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டனர்.
அதையறிந்த பள்ளி தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் உள்ளிட்ட ஆசிரியர்கள், பொதுமக்கள் ஒன்று திரண்டு, வகுப்பறை கதவுகளை மரக்கட்டையால் திறந்தனர். வகுப்பறை கட்டிடம் முழுவதும் மின்சாரம் பாய்ந்ததால், மின் இணைப்பை துண்டித்துள்ளனர். அதனால் மாணவ, மாணவியர் உயிர் தப்பினர். இச்சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து ஆத்தூர் தவளப்பட்டி மலை கிராம மக்கள் கூறியதாவது:
அரசு நடுநிலைப்பள்ளியின் வகுப்பறை மேல்தளம் சீரமைப்பு பணியை பல மாதங்களாக கிடப்பில் போட்டுள்ளனர். வகுப்பறை கட்டிடத்தில் மழை நீர் கசிந்து, 'ஷாக்' அடிப்பதால் மாணவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. பி.டி.ஓ., உள்ளிட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்தும், வகுப்பறை பணிகள் குறித்து எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் உள்ளனர். பணிகளை கிடப்பில் போட்டுள்ள ஒப்பந்ததாரர்கள், யூனியன் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.


